Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் மட்டுமே இது சாத்தியம்..7 நாள் முதல் 1 ஆண்டு திட்டத்திற்கு 5.50% வட்டி!

போஸ்ட் ஆபீஸில் மட்டுமே இது சாத்தியம்..7 நாள் முதல் 1 ஆண்டு திட்டத்திற்கு 5.50% வட்டி!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

கணக்கை திறக்க குறைந்தபட்ச தொகை ரூ. 1000. அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    போஸ்ட் ஆபீஸில் 7 நாள் முதல் 1 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5.50% வட்டி வழங்கப்படுகிறது. இதுக் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    சேமிப்பு மற்றும் நல்ல லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் கொட்டி கிடக்கின்றன.அவற்றில் சரியானதை பார்த்து தேர்ந்தெடுப்பது மட்டுமே முக்கியம். அந்த வகையில் குறுகியகால சேமிப்பு திட்டங்களை தேடி கொண்டிருப்பவர்கள் இதை கொஞ்சம் கவனியுங்கள். போஸ்ட் ஆபீஸில் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டமானது அரசாங்க உத்தரவாதத்துடன் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இதில் காலாண்டு வட்டி விகிதத்தைப் பெறலாம்.

    டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கொஞ்சம் கவனிங்க.. அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறுது!

    போஸ்ட் ஆபீஸில் FD கணக்கு திறப்பது எப்படி?

    இந்தியா போஸ்ட் இணையதளத்தின்படி, வாடிக்கையாளர்கள் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான விதிமுறைகளுடன் FDகளைத் திறக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை கொடுத்து தபால் அலுவலகத்தில் FD திறக்கலாம். குறைந்தபட்ச தொகை ரூ. 1000. அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.

    நன்மைகள்:

    இதில் முதலீட்டாளர்களின் பணம் முழுமையாக பாதுகாக்கப்படும்.இந்த கணக்கை ஆஃப்லைனில் பணம் அல்லது காசோலை, ஆன்லைனில் நெட் பேங்கிங் அல்லது இரண்டையும் பயன்படுத்தி தொடங்கலாம்.ஒன்றுக்கும் மேற்பட்ட FD உருவாக்கலாம் அதேசமயம் FDகள் உள்ள கணக்குகளை இணைக்கலாம். இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள FD கணக்குகளுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு போஸ்ட் ஆபீஸில் இருந்து மற்றொரு போஸ்ட் ஆபீஸூக்கு, நீங்கள் எளிதாக FD கணக்கை மாற்றலாம்.

    வெறும் ரூ.150 இருந்தால் போதும்.. குழந்தைகளின் படிப்புக்காக இப்படியொரு சேமிப்பை நீங்கள் தொடங்கலாம்!

    போஸ்ட் ஆபீஸில் 7 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான FDக்கு 5.50 சதவீத வட்டி கிடைக்கும். ஒரு வருடம் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான FDகளும் அதே வட்டி விகிதம் வழங்கப்படுகின்றன. 3 வருடங்கள் ஒரு நாள் முதல் 5 வருடங்கள் வரையிலான விதிமுறைகளுடன் கூடிய FD களில், 6.70 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

    எனவே நல்ல சேமிப்பை தொடங்க நினைப்பவர்கள் தைரியமாக போஸ்ட் ஆபீஸில் FD கணக்கில் முதலீடு செய்யலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: India post, Post Office, Savings

    அடுத்த செய்தி