• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபீஸில் போடும் பணம் எப்படி ரிட்டன் கிடைக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

போஸ்ட் ஆபீஸில் போடும் பணம் எப்படி ரிட்டன் கிடைக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் இணைப்பு கணக்கை மூடும் போது டூப்ளிகேட் பாஸ்புக்குக்கு விண்ணப்பிப்பது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது

  • Share this:
    போஸ்ட் ஆஃபீஸில் சில முதலீடு திட்டங்களில் முதிர்வு காலத்திற்கு பின் பணம் எப்படி வழங்கப்படும் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    அஞ்சல் சேமிப்பில் பலரும் தனிக் கணக்கு மற்றும் இணைப்பு கணக்கு இரண்டையும் பராமரிக்கின்றனர். போஸ்ட் ஆஃபீஸில் இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை எவ்வாறு பிரித்து வழங்கப்படும் அதற்கான செயலாக்கம் எப்படி என்பதை மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது. அதிலும் குறிப்பாக இணைப்பு கணக்கை மூடும் போது டூப்ளிகேட் பாஸ்புக்குக்கு விண்ணப்பிப்பது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுப்பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இந்த பதிவில் விவரமாக தெரிந்து கொள்ளுங்கள்.  போஸ்ட் ஆபீஸில் இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செட்டில்மெண்ட் தொகையானது 2 வகையில் பிரித்து தரப்படும்முதலில் இணைப்பு கணக்கில் இருக்கும் ஏ மற்றும் பி வகைகளை பார்க்கலாம்.

    அதாவது போஸ்ட் ஆஃபீஸில் செயல்பாட்டில் இருக்கும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் இந்த இரண்டு திட்டத்திலும் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே இணைப்புக் கணக்கு திறக்க முடியும் என்பது பொதுவான விதிமுறை இதில் ஏ பிரிவில் மூன்று பேருக்கு அல்லது கணக்கு உரிமையாளருக்கு செட்டில்மெண்ட் தொகை வழங்கப்படும். ஆனால் பி பிரிவில் மூன்று பேரில் ஏதேனும் ஒருவருக்கு மட்டுமே செட்டில்மெண்ட் தொகை வழங்கப்படும்.

    அதுமட்டுமில்லை இந்த வகையில் அக்கவுண்ட் தொடர்பான சேவையை ஒருவர் மட்டுமே கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடர்பவர்கள் போஸ்ட் ஆஃபீஸூக்கு ஒருமுறை சென்று உங்கள் சந்தேகங்களை தெளிப்படுத்தி கொள்ளவும். நல்ல வருவாய், வட்டி, சேமிப்பு இதையெல்லாம் கவனித்தில் கொண்டு அஞ்சல் சேமிப்பில் முதலீடு திட்டங்களை தேர்ந்தெடுத்து சேமிப்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனாலும் முதிர்வு காலத்தின் போது உங்கள் கைக்கு பணம் எப்படி ரிட்டன் கிடைக்கும்? அதில் இருக்கும் விதிமுறைகள் என்ன என்பதை பற்றி வாடிக்கையாளராக நீங்கள் தெரிந்து கொள்வது மிக மிக அவசியமான ஒன்று.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: