5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ. 5 லட்சம் வரை சேமிக்க ஒரு வழி இருக்கு!

போஸ்ட் ஆஃபிஸ் திட்டங்கள்

மாதமும் வட்டி வழங்கப்படும். அதே போல் 5 ஆண்டுகள் கழித்து அசல் தொகையும் கிடைக்கும்.

 • Share this:
  மாதம் மாதம் நல்ல வருமானம் தரக்கூடிய அரசின் உத்தரவாதம் பெற்றுள்ள ஒரு சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து தான் பார்க்க போகிறோம்.

  வங்கி முதலீட்டை காட்டிலும் போஸ்ட் ஆஃபீஸ் திட்டங்கள் நன்கு கைக்கொடுக்கின்றன. அதுமட்டுமில்லை நல்ல வருமானம் தரக்கூடிய ஏகப்பட்ட திட்டங்களும் அஞ்சல் சேமிப்பில் அசத்தி வருகின்றன. நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடு, 5 ஆண்டு முதலீடு, பென்சன், மாத வட்டி என நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து உங்கள் வருவாய் மாறுபடுகிறது. ஆனால் லாபம் என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் உள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது போஸ்ட் ஆஃபீஸில் இருக்கும் மாதம் வருவாய் திட்டம் மற்றும் அதன் பலன்கள்.

  இந்திய தபால் துறை சிறப்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டங்களில் நல்ல வருவாய் கொடுக்கும் திட்டமாக மாத வருவாய் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகால சேமிப்பு திட்டமாக உள்ளது. அதிகப்பட்சமாக இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.4.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்த 5 ஆண்டு காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் வட்டி வழங்கப்படும். அதே போல் 5 ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இத்திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் என்றால் அடையாள ஆவணம், முகவரிச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 போன்றவை போதும். வெறும் 1,000 ரூபாய் செலுத்தி கணக்கைத் தொடங்க முடியும். உங்கள் சக்திக்கு ஏற்றவாறு டெபாசிட் தொகையை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஏற்றவாறு நீங்கள் பென்சன் பெறலாம். மாதம் மாதம் உங்களுக்கு பென்சன் தொகை வழங்கப்படும்.

  அதேபோல் தேவைப்பட்டால் கணக்கை இடையிலும் மூடி விடலாம். அதிலும் கணக்கை தொடங்கிய முதல் ஆண்டே மூட முடியாது. 2 அல்லது 3 ஆவது ஆண்டில் கணக்கை மூடிவிட்டு உங்கள் அசல் தொகையும் பெற்றுக்கொள்ளலாம். இதுக்குறித்த மேலும் தகவல்களுக்கு அஞ்சல் சேமிப்பு தளத்தில் பார்க்கலாம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: