• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அஞ்சல் சேமிப்பில் எதற்கெல்லாம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா?

அஞ்சல் சேமிப்பில் எதற்கெல்லாம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா?

அஞ்சல் சேமிப்பு

அஞ்சல் சேமிப்பு

அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் 4 மாதங்களுக்கு மேல் அதே நிலை தொடர்ந்தால் அப்போது தான் சிக்கல்.

  • Share this:
    அஞ்சல் சேமிப்பில் பெரும்பாலான மக்கள் சேமிப்பை வைத்திருக்கும் தொடர் வைப்பு நிதி திட்டமான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் எதற்கெல்லாம் அபராதம் விதிக்கப்படுகிறது என பார்க்கலாம்.

    ஒரு நல்ல சேமிப்பு திட்டத்தை தேடுபவர்களுக்கு கட்டாயம் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் கைக்கொடுக்கிறது. இவை நிலையான வருமானத்தை அளிப்பவை. இவ்வகையான முதலீட்டுத் திட்டங்களில் நீங்கள் மாதாந்திர தவணை முறையில் தொகையைச் செலுத்தி, வட்டியுடன் முதிர்வுத் தொகையைப் பெறலாம்.வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் இரண்டிலும் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களை தொடங்கலாம். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள். ஆண்டுக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகை உச்ச வரம்பு எதுவும் இல்லை. தனியாகவோ இரண்டு நபர்களோ இணைந்து முதலீடு செய்யலாம்

    ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெக்கரிங் கணக்கை தொடர விரும்பும் நபர்கள் மேலும் 5ஆண்டுகள் நீடித்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏனென்றால், தபால் நிலைய ரெக்கரிங் கணக்கின் அதிகபட்ச காலம் பத்து ஆண்டுகள். கூடுதலாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்கப்பட்ட அக்கவுண்டுகளுக்கு காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்ட வட்டி தொடர்ந்து வழங்கப்படும். போஸ்ட் ஆபீஸில் ரெக்கரிங் கணக்கு வைத்திருப்பவர் தொடர்ந்து 4 மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் இந்த கணக்கில் சேமிப்பை டெபாசிட் செய்ய முடியாவிட்டால் பரவாயில்லை ஆனால் அதுவே 4 மாதங்களுக்கு மேல் அதே நிலை தொடர்ந்தால் அப்போது தான் சிக்கல்.

    கணக்கு வைத்திருப்பவரை, தவணை செலுத்தாதவராக அறிவித்து கணக்கு மூடப்படும். இதுபோன்ற காரணங்களால் கணக்கு மூடப்பட்டால், அடுத்த மாதத்திற்கு (ஐந்தாவது மாதம்) மீதமுள்ள தொகையை செலுத்திய 2 மாதங்களுக்குள் கணக்கை மீண்டும் திறக்க வேண்டும். அதே போல் அந்த நபரிடம் அஞ்சலகம் அபராத கட்டணத்தையும் வசூலிக்கும். ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் கணக்கு வைத்திருப்பவருக்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ரெக்கரிங் கணக்கை மீண்டும் திறக்கும்போது தவறவிட்ட சேமிப்புத் தொகையுடன் தொடர்புடைய கணக்கு வைத்திருப்பவர் இந்த அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். அதே போல் வாடிக்கையாளர் கணக்கை மீண்டும் திறக்க விரும்பவில்லை என்றால், தபால் நிலையம் முன்கூட்டியே திரும்பப் பெறும் விதியை செயல்படுத்தும்.

    எனவே, ரெக்கரிங் திட்டத்தில் டெபாசிட் செய்திருப்பவர்கள் அல்லது செய்ய திட்டமிடுபவர்கள் மாத தவனையை சரியான தேதியில் கட்ட ஒருபோதும் மறவாதீர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: