போஸ்ட் ஆபீஸ் பேமெண்ட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அதை எப்படி ஆன்லைனில் ஓபன் செய்வது பற்றி விரிவாக பார்க்கலாம்.
போஸ்ட் ஆபீஸ் பேமெண்ட் வங்கியில் இந்த ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை ஓபன் செய்து கொண்டாலே போதும், இதன் மூலம் நெட் பேக்கிங்கை ஆக்டிவேட் செய்து கொண்டு அதன் மூலம் தபால் அலுவலக கிளைக்குச் செல்லாமல், உங்கள் பிபிஎஃப் கணக்கிலோ அல்லது தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்புத்தொகை (ஆர்.டி) கணக்கிலோ பணத்தை டெபாசிட் செய்யலாம். நீங்கள் ஆர்.டி அல்லது டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பினாலோ, அவற்றை மூட நினைத்தாலும் கூட நீங்கள் நெட் பேக்கிங் மூலம் செய்து முடிக்கலாம். எனவே தபால் நிலையத்தில் நீங்கள் தொடங்கி இருக்கும் சிறுசேமிப்பு கணக்கில் பணத்தை
டெபாசிட் செய்ய இனி நேரடியாக தபால் நிலையம் செல்ல தேவையில்லை. ஆன்லைனில் முடித்து விடலாம். அதற்கு இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பெரிதும் உதவும்.
இப்போது இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியின் ஜீரோ பேலன்ஸ் சேவிங்க்ஸ் அக்கவுண்டை ஆன்லைனில் எப்படி தொடங்குவது என பார்க்கலாம்.
1. முதலில் பிளே ஸ்டோருக்கு சென்று ippb mobile banking-ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. இதை ஓபன் செய்ததும்
OPEN YOUR ACCOUNT NOW என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
3. அதில் கேட்கப்படும் மொபைல் எண் மற்றும் பான் எண்ணை பதிவு செய்து
continue கொடுக்க வேண்டும்.
4. இப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு வந்த
otp நம்பரை அதில் பதிவு செய்து
submit கொடுக்க வேண்டும்
5. அடுத்தது ஆதார் நம்பரை கொடுக்க வேண்டும். அதை உறுதி செய்ய மீண்டும் உங்களுடைய மொபைல் நம்பருக்கு
otp வரும். அதை இங்கே பதிவு செய்து
submit கொடுக்க வேண்டும்.
6. இப்போது ஸ்கீரினில் 5
படிகள் தோன்றும். வீட்டு முகவரி, தனி நபர் முகவரி,நாமினி விவரம், அக்கவுண்ட் விவரம், பான் கார்டு தகவல்கள் என இந்த 5 படிகளை நிரப்ப வேண்டும்.
இதையும் படிங்க.. sbi : எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய நம்பர்!
7. இந்த விவரங்களை நிரப்பிய பின்பு
continue ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
8. இப்போது ஸ்கீரினில்
banking options தோன்றும். அதில் மொபைல் பேக்கிங், இண்டர்நெட் பேக்கிங், மிஸ்டு கால் பேக்கிங் வசதி வேண்டும் என டிக் செய்து கொள்ள வேண்டும். இப்போது
confirm பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
9. இப்போது இவை எல்லாவற்றையும் உறுதி செய்ய மீண்டும் உங்கள் மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். இதை பதிவு செய்து submit பட்டனை கிளிக் செய்தால் வெற்றிக்கரமாக நீங்கள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டை ஓபன் செய்து விட்டதாக மெசேஜை ஸ்கிரீனில் பார்க்க முடியும்.
10 இந்த ஸ்கிரீனில் கஸ்டமர் ஐடி தோன்று அதை அப்படியே நோட் செய்து கொள்ள வேண்டும். அக்கவுண்ட் ஒபன் செய்த பிறகு தான் இதன் மூலம் மொபைல் பேக்கிங்கை ஆக்டிவேட் செய்ய முடியும். பின்பு மொபைல் பேக்கிங் வழியாக தான் இந்த அக்கவுண்டை செயல்படுத்த முடியும் அதன் மூலம் டெபாசிட் செய்தல், சிறு சேமிப்பு கணக்குகளுக்கு பணத்தை டெபாசிட் செய்தல் போன்ற பணிகளை செய்யலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.