ஹோம் /நியூஸ் /வணிகம் /

நாளை முதல் போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வரும் முக்கிய மாற்றம் இதுதான்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க!

நாளை முதல் போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வரும் முக்கிய மாற்றம் இதுதான்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க!

செல்வ மகள் சேமிப்பு

செல்வ மகள் சேமிப்பு

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் குறைந்தபட்சம் ரூ.25 செலுத்த வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜனவரி 1 முதல் அதாவது நாளை முதல் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வரவிருக்கும் முக்கிய மாற்றத்தை பற்றி வாடிக்கையாளர்கள் இன்றே நோட் செய்து கொள்வது நல்லது.

புது ஆண்டான 2022ஐ  வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர். 2020 ஆண்டு முழுவது லாக்டவுனில் சென்றது. 2021 ஆம் ஆண்டு பழைய நிலை மீண்டும் திரும்பியது. ஆனால் ஆண்டு முடியும் தருவாயில் ஓமைக்ரான் அச்சுறுத்தல் ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் நேற்று, இன்று என 2 நாட்களாக திடீர் மழை மக்களை வாட்டி வதைக்கிறது. 2022 ஆண்டு ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது என ஒருபக்கம் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பதற்றத்தில் பொதுமக்களாகிய நீங்கள் சில முக்கிய அப்டேட்டுகளை மறந்து விடாதீர்கள். அதாவது ஜனவரி 1 2022 முதல் வங்கிகளில் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் அண்மையில் அறிவிக்கப்பட்ட மாற்றம்.

இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தை மக்கள் அதிகம் விரும்ப என்ன காரணம்? விவரம் உள்ளே

இந்திய தபால் துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த மாற்றத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதாவது இனி நீங்கள் ஒரு வரம்புக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் குறைந்தபட்சம் ரூ.25 செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க.. ஏழை எளிய மக்களும் பெரிய சேமிப்பை இங்கு செய்யலாம்.. போஸ்ட் ஆபீஸில் கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

அதே போல், இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் ஒரு மாதத்தில் ரூ.10,000 டெபாசிட் செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை. இந்த வரம்பை விட அதிகமாக டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இலவச வரம்பிற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் எடுக்கும்போது, குறைந்தபட்சம் 25 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தவிர மற்ற சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.25,000 எடுக்க கட்டணம் கிடையாது. அதே சமயம் அடிப்படை சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் கிடையாது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: India Post Internet Banking, Post Office, Savings