ஹோம் /நியூஸ் /வணிகம் /

போஸ்ட் ஆபீஸ் முக்கிய சேமிப்பு திட்டத்திற்கு இந்த 3 வழிகளில் பணம் செலுத்தலாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க

போஸ்ட் ஆபீஸ் முக்கிய சேமிப்பு திட்டத்திற்கு இந்த 3 வழிகளில் பணம் செலுத்தலாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் அல்லது சேர விருப்பம் உள்ளவர்கள் இந்த முக்கியமான தகவலை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போஸ்ட் ஆபீஸில் இருக்கும் முக்கியமான சேமிப்பு திட்டமாக பார்க்கப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஆன்லைன் வழியே பணம் செலுத்தும் 3 முறைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகளுக்காக அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பொறுப்பில் இருப்பவர்கள் கணக்கு தொடங்கலாம். பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசு போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. இது தவிர சில பொத்துறை வங்கியிலும் இதை தொடங்கலாம்.

  அரசு சார்பில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் அல்லது சேர விருப்பம் உள்ளவர்கள் இந்த முக்கியமான தகவலை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதத்தவணையை இனி ஆன்லைனில் செலுத்தலாம். அதற்கு 3 வழிகள் உள்ளன.

  இனி போஸ்ட் ஆபீஸ் போக தேவையில்லை.. செல்வமகள் திட்டத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

  1. POSB

  POSB  மொபைல் பேங்க்  வசதியை பயன்படுத்தி நீங்கள் நிதிகளை மாற்றுவது மட்டுமல்லாமல் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்து முதலீடு செய்யலாம். தபால் அலுவலக இணைய மொபைல் வங்கி பல அம்சங்களைக் கொண்டுள்ளது, இது உங்கள் வங்கித் தேவைகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும், ஏனெனில் தபால் நிலையங்களிலும் மொபைல் வங்கி தொடங்கபட்டுள்ளது. இதன் மூலம் செல்வ மகள் போன்ற  அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களிலும் மாதத்தவணை தொகையை செலுத்தலாம்.

  2. IPPB  :

  போஸ்ட் ஆபீஸின்அதிகாரப்பூர்வ செயலியான இதில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளட்டு தொகையை செலுத்த வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

  3. வாடிக்கையாளர்களுக்கு NEFT வசதி

  ,இப்போது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு நிதி பரிமாற்றத்தையும் செய்யலாம். NEFT மற்றும் RTGS ஆகிய வசதிகள் அஞ்சல் துறை மூலம் தொடங்கப்பட்டுள்ளது. தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு RTGS வழியாகவும் பணம் அனுப்பும் வசதி கிடைக்கும். இதனுடன்,மற்ற வங்கிகளைப் போலவே போஸ்ட் ஆஃபீஸூம் வாடிக்கையாளர்களின் பிரதான பணப்பரிமாற்றத்துக்கான தளமாக செயல்படுகிறது. எனவே NEFT மூலம் எந்தவொரு அக்கவுண்டில் இருந்தும்  பணத்தை உங்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக்கு அனுப்பி அதிலிருந்து இந்த திட்டத்திற்கு பணத்தை செலுத்தலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: India post, Post Office, Savings