போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுக்குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலம்.
அதாவது, போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்திருப்பவர்கள் உங்கள் மொபைல் எண் மற்றும் பான் எண்ணை தபால் அலுவல கணக்குடன் புதுப்பிக்கவில்லை அல்லது இணைக்கவில்லை என்றால், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் உங்களால் பரிவர்த்தனை செய்ய முடியாது. தபால் அலுவலகத்தில் நடைபெறும் மோசடிகளைக் குறைக்கும் வகையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எந்தவொரு பரிவர்த்தனையும் (அதாவது டெபாசிட்/பணத்தை எடுத்தல்/கடன் பெறுதல்/கடன் திருப்பிச் செலுத்துதல்/கணக்கை மூடுதல் - முன்கூட்டியே அல்லது முதிர்வு) அஞ்சல் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான செயல்பாட்டிற்கு மொபைல் எண் மற்றும் பான் எண் அவசியம். இதுவரை மொபைல் எண், பான் எண்ணை போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்டில் அப்டேட் செய்யாதவர்கள், அல்லது மாற்றப்பட்ட மொபைல் எண்ணை மீண்டும் ஒருமுறை அப்டேட் செய்யாதவர்கள் அனைவரும் உடனடியாக இதை செய்துவிடுங்கள்.
ரூ. 20,000 மற்றும் அதற்கு மேல் தொகை
டெபாசிட் செய்தல், எடுத்தல், முதலீடு திட்டங்களில் கடனாக பெறுதல், பணப்பரிவர்த்தனை செய்தல் என எந்தவிதமான செயல்பாட்டுக்கும் மொபைல் எண்ணை அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் சரிபார்க்கப்படும். தேவைப்பட்டால் பரிவர்த்தனையைத் தொடங்கும் முன் புதுப்பிக்க கொள்ளவும்.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் அதிக வருமானம் தரும் திட்டம்.. வெறும் ரூ. 100 இருந்தால் கூட போதும் கணக்கை தொடங்கலாம்!
அதே போல் தொகை ரூ. 50,000 மற்றும் அதற்கு மேல் இருந்தால், பரிவர்த்தனையைத் தொடங்குவதற்கு முன்
PAN சரிபார்க்கப்படும் மற்றும் தேவைப்பட்டால் புதுப்பிக்க வேண்டும்.
பரிவர்த்தனை செய்ய வேண்டிய கணக்கில் மொபைல் எண்/PAN புதுப்பிக்கப்படாவிட்டால்/இணைக்கவில்லை என்றால், அஞ்சல் அலுவலகத்தில் இருந்தும், ஆன்லைனில் இருந்தும் SB-103/SB-7/7A/7B/ படிவத்தைப் பயன்படுத்தி மொபைல் எண், பான் எண்ணை சேர்க்க வேண்டும் அல்லது புதுபிக்க வேண்டும். அதே போல் நம்பரை மாற்ற வேண்டும் என்றாலும் அதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுவரை செய்யாதவர்கள் இதை நேரம் கிடைக்கும் போதே செய்து முடிக்கவும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.