Home /News /business /

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வந்தது புது அப்டேட்!

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு வந்தது புது அப்டேட்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி சான்றிதழ் வழங்கப்படும்

  • News18
  • Last Updated :
    போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக இந்த தகவலை தெரிந்து கொண்டால் பயன் பெறலாம்.

    இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுத்தவிர போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு என பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. வட்டி மற்றும் ரிஸ்க் இல்லாத முதலீடு என ஏகப்பட்ட காரணங்களால் பலரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பை நாடி செல்கின்றனர். அதுமட்டுமில்லை, போஸ்ட் ஆபீஸில் செயல்பட்டு வரும் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்டம் போன்றவற்றில் சேமிப்பை தொடங்கும் படி அரசு சார்பிலும் வலியுறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்டால் நிதியாண்டு அடிப்படையில் வட்டி சான்றிதழ் வழங்கலாம் என அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சேமிப்பு கணக்கு மற்றும் செல்வ மகள் திட்டம், தொடர் வைப்பு கணக்கு, வருங்கால வைப்புநிதி கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி தொகை அவர்களின் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும்.

    இப்போது வரை இந்த நடைமுறை தான் பழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய உதவிக்கரமாக இந்த திட்டங்களில் வட்டி விகிதம் குறித்த ஒரு நிதியாண்டுக்கான சான்றிதழை அளிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதை கருத்தில் கொண்டு கோர் பேங்கிங்கில் இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை முயற்சி எடுத்து வருவதாகவும் கூடிய விரைவில் இவை அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த சான்றிதழுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் அஞ்சல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Post Office

    அடுத்த செய்தி