ஹோம் /நியூஸ் /வணிகம் /

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா? அப்ப இந்த அப்டேட் பற்றி நீங்க தெரிஞ்சுக்கணும்!

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா? அப்ப இந்த அப்டேட் பற்றி நீங்க தெரிஞ்சுக்கணும்!

Savings Account | போஸ்ட் ஆபீஸ் டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றலாம்,

Savings Account | போஸ்ட் ஆபீஸ் டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றலாம்,

Savings Account | போஸ்ட் ஆபீஸ் டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றலாம்,

  • 3 minute read
  • Last Updated :

போஸ்ட் ஆபிஸில் இருக்கும் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களில் அவ்வப்போது பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வங்கியை காட்டிலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் இரட்டிப்பு பலன் இருப்பதை அறிந்து கொண்ட பலரும் இப்போது அதிகமாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது.மிடில் கிளாஸ் தொடங்கி அப்பர் கிளாஸ் வரை போஸ்ட் ஆபீஸ் முதலீட்டில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன. மத்திய அரசு அறிமுகப்படுத்திய 9 வகையான் சிறு சேமிப்பு திட்டங்களும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன.

அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது அதுக்குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். போஸ்ட் ஆபீஸில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் பிபிஎஃப் திட்டத்தில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், முதலீடு தொடங்கி இருப்பவர்கள் டிஜிட்டல் முறையில் இனி பணத்தை செலுத்தலாம் தெரியுமா? அக்கவுண்ட் தொடங்கிய பின்பு மாதம் கட்ட வேண்டிய தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். இதற்கான ஏற்பாடுகள் போஸ்ட் ஆபீஸின் IPPB ஆப்பில் செய்ய முடியும்.

இதற்கு வாடிக்கையாளர் டிஜிட்டல் கணக்கிற்கு பதிவு செய்திருக்க வேண்டும். இந்த கணக்கின் மூலம் அவ்ர்கள் சிறுசேமிப்பு திட்டங்களான செல்வ மகள் சேமிப்பு திட்டம், பிபிஎஃப் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு பணத்தை செலுத்தலாம். போஸ்ட் ஆபீஸில் இந்த டிஜிட்டல் கணக்கை தொடங்க 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த அக்கவுண்டுக்கு மினிமம் பேலன்ஸ் பிரச்சனையும் இல்லை. கணக்கு செயல்படுவதற்கு KYC செயல்முறைகள் 12 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதிகபட்ச வருடாந்திர ஒட்டுமொத்த வைப்புத்தொகை ரூ.2 லட்சம் வரை அனுமதிக்கப்படுகிறது, மேலும் டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றலாம், டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்புக் கணக்குடன் இணைக்கவும் முடியும்.

Also Read : ஸ்மார்ட்ஃபோன் கேமராவைப் பயன்படுத்தி போலியான PAN கார்டைக் கண்டறிவது எப்படி!

இந்தக் கணக்கில் காலாண்டு அடிப்படையில் 2.50 சதவிகிதம் வருடாந்திர வட்டி வீதம் செலுத்தப்படுகிறது. இப்போது இந்த டிஜிட்டல் கணக்கை எப்படி தொடங்குவது என பார்க்கலாம்.

1. பிளே ஸ்டோருக்குச் சென்று IPPB மொபைல் பேங்கிங் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

2. அதனுள் சென்று, ’உங்கள் கணக்கைத் திறக்கவும்' என்பதைக் கிளிக் செய்து, மொபைல் எண், பான் எண் போன்ற தேவையான தகவல்களை உள்ளிட்டு 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் மொபைல் எண்ணில் SMS மூலம் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும். இப்போது ஆதாரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும் அல்லது ஆதார் எண் அல்லது ஆதார் விர்ச்சுவல் ஐடியை கைமுறையாக உள்ளிடவும்.

4. இப்போது 'செக்பாக்ஸ்' ஐ டிக் செய்து 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTPஐ உள்ளிட்டு, 'தனிப்பட்ட தகவல்' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு 'சேமி' என்பதைக் கிளிக் செய்யவும்.

5. இப்போது 'PAN & Communication Address' என்பதைக் கிளிக் செய்து, விவசாயம் அல்லாத வருமானம், விவசாய வருமானம் மற்றும் குறிப்புகள் ஏதேனும் இருந்தால் உள்ளிடவும். 'சேமி' என்பதைக் கிளிக் செய்து அடுத்த பக்கத்தில் நாமினி விவரங்களை உள்ளிடவும்.

இந்த வங்கியில் 10,000க்கு மேல் வரவு வைத்தாலே இனி கட்டணம் வசூல் - 2022 ஜனவரி 1 முதல் புதிய விதி அமல்!

6. இப்போது 'கூடுதல் தகவல்' என்பதைக் கிளிக் செய்து, திருமண நிலை, தொழில், மொத்த ஆண்டு வருமானம், கல்வித் தகுதி, போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு 'சேவ்' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது 'கணக்கு தகவல்' என்பதைக் கிளிக் செய்து, கணக்கு அறிக்கையை வழங்குவதற்கான முறையைத் தேர்ந்தெடுத்து, ஆதார் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, திட்ட பயனாளி ஐடி ஏதேனும் இருந்தால் உள்ளிடவும்.

7. இப்போது 'செக்பாக்ஸில்' டிக் செய்து 'சேவ்' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது 'தொடரவும்' என்பதைக் கிளிக் செய்து, சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களைச் சரிபார்க்கவும். இப்போது நீங்கள் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு முறை கடவுச்சொல்லை SMS மூலம் பெறுவீர்கள், அதை உள்ளிடவும் அடுத்த நொடியே டிஜிட்டல் சேமிப்பு வங்கி கணக்கு வெற்றிகரமாக திறக்கப்படும். இதன் மூலம் உங்கள் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: