உங்களை லட்சாதிபதி ஆக்க போக்கும் அந்த 3 திட்டங்கள்... முதலீடு செய்ய நீங்க தயாரா?

போஸ்ட் ஆஃபிஸ் திட்டங்கள்

குறைந்தபட்சம் ரூ.1,500 மற்றும் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.

  • Share this:
    உங்களை லட்சாதிபதி ஆக்க போகும் அந்த முத்தான 3 திட்டங்கள் பற்றி தெரியுமா? நல்ல வட்டி கிடைக்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நீங்க ரெடியா?

    வங்கியைக் காட்டிலும் எப்பவுமே அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் நல்ல வட்டியையும் லாபத்தையும் தர கூடியவை. ஒரு குறிப்பிட்ட தொகையை கையில் வைத்துகொண்டு நல்ல முதலீடு திட்டத்தை தேடி கொண்டிருந்தால் கவனியுங்கள் கண்டிப்பாக இந்த 3 திட்டங்கள் உங்கள் வாழ்வை மாற்றும். பாதுகாப்பான மற்றும் நல்ல வட்டி விகிதங்களை பெறும் நல்லதொரு தேர்வாகவும் இந்த திட்டங்கள் இருக்கும். நோட் பண்ணிக்கோங்க.

    போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட், அஞ்சலக சேமிப்பில் செயல்பாட்டில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. இதில் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுகளைப் பொர்றுத்து 5.5 சதவீதம் முதல் 6.7 சதவீதம் வரை வட்டியைப் பெறலாம். நீங்கள் முதலீடு செய்யும் பணம் அப்படியே இரட்டிப்பாகும். இதே போல தான் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் மாதம் உங்கள் வட்டியை எடுத்து கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.1,500 மற்றும் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்துக்கான வட்டி 6.6 சதவீதம். இத்திட்டம் 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்டது. இந்த திட்டத்தில் உங்களின் முதிர்வு தொகை இரட்டியாகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அஞ்சல சேமிப்பில் இருக்கும் மற்றொரு மிகச் சிறந்த முதலீடு திட்டம் தான் போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்
    இந்த ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 5.8% வட்டி வழங்கப்பட்டு முதிர்வு தொகை உங்களுக்கு கிடைக்கிறது.இதுப்போன்ற மிகச் சிறந்த முதலீடு திட்டங்கள் அஞ்சலக சேமிப்பில் உள்ளன. ஒருவேளை முதலீடு செய்ய திட்ட வைத்திருந்தால் தயங்காமல் அஞ்சலக திட்டங்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published: