• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அஞ்சல் சேமிப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்! வீடு தேடி வரும் சேவை

அஞ்சல் சேமிப்பில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்! வீடு தேடி வரும் சேவை

போஸ்ட் ஆஃபிஸ்

போஸ்ட் ஆஃபிஸ்

போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வீட்டு வாசலில் வங்கி வசதியை வழங்குகிறது.

  • Share this:
    இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வீட்டு வாசலில் வங்கி வசதியை வழங்குகிறது. உங்களுக்கு தெரியுமா?

    சமீப காலமாக வங்கி சேமிப்பு கணக்குகளைக் காட்டிலும் பொதுமக்கள் அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நண்பர்கள், உறவினர்கள் அனுபவத்தை பகிர அதன் மூலமாக கணக்கை தொடர்பவர்களும் அதிகரித்துள்ளனர். குறிப்பாக அஞ்சல் சேமிப்பில் நல்ல வட்டி கிடைப்பதும் வங்கியைக் காட்டிலும் லாபம் காண்பதும் உண்மை தான்.இங்கு செயல்பாட்டில் இருக்கும் சிறுசேமிப்பு திட்டங்கள் பல, முதிர்வு தொகையில் லாபத்தை வாரி வழங்குகிறது. முதலீடு திட்டங்களும் வட்டியில் பொதுமக்களை கவர்கிறது. இப்படி எண்ணற்ற பயன்களால் பொதுமக்களை கவர்ந்து வரும் அஞ்சலக சேமிப்பில் இபோது ஒரு சூப்பரான அப்டேட் வந்துத்துள்ளது. அது என்னவென்றால்,இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வீட்டு வாசலில் வங்கி வசதியை வழங்குகிறது.

    அஞ்சல் ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். நீங்கள் வங்கிக் கணக்கைத் open செய்யலாம், பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம், டெபாசிட் செய்யலாம் மற்றும் பணத்தை எடுக்கலாம், ரீசார்ஜ் செய்யலாம் அல்லது பில்கள் செலுத்தலாம். பிற வங்கிகளுடன் வைத்திருக்கும் உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளையும் அணுகலாம்.போஸ்ட் ஆபிஸ் மூலம் வீட்டு வாசலில் பணம் பெறுவதி எப்படி? என்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முதலில் நீங்கள் 155299 என்ற எண் மூலம் தொடர்பு மையத்தை அழைத்து பதிவு செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும்

    இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் ஊழியர்களுக்கு வருகை விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை வழங்க வேண்டும், அல்லது உங்கள் QR அட்டையை டோர்ஸ்டெப் பிரதிநிதிக்கு காண்பிக்க வேண்டும்.இதன் மூலம் பேலன்ஸ் தொகை பற்றி அறிந்துகொள்ளலாம், ஆதார் to ஆதார் பணப் பரிமாற்றம், பணம் எடுத்தல் மற்றும் மினி ஸ்டேட்மேண்ட் பெறலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: