முகப்பு /செய்தி /வணிகம் / கஷ்டமே இல்லை.. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை வீட்டில் இருந்தபடியே தொடங்கலாம்!

கஷ்டமே இல்லை.. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை வீட்டில் இருந்தபடியே தொடங்கலாம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

ஏராளமான சலுகைகள் கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை நீங்களும் தொடங்க வேண்டுமா?

  • Last Updated :

சமீபகாலமாக போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு என்பது பெருமளவில் அதிகரித்துள்ளது. பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் கிடைக்கும் வரிச்சலுகைகள், வட்டி, சிறுசேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றை சொல்லலாம். அதே போல் இந்த டிஜிட்டல் உலகில் வங்கி கணக்கில்  பெரும்பாலான சேவைகளை, அஞ்சலக கணக்கிலும் பெற முடியும். இதை எல்லா வாடிக்கையாளர்களும் எளிதில் பெறலாம். குறிப்பாக ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதி எல்லாமே போஸ்ட் ஆபீஸ் சேவையிலும் வந்து விட்டது.

மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், அரசின் தேசிய சேமிப்பு பத்திரம், தேசிய ஓய்வூதிய திட்டம், தொடர் வைப்பு நிதி திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் போன்றவற்றை ஆன்லைனில் தொடங்கும் வசதியும் தற்சமயம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் சமீபத்திய அறிவுறுத்தல் படி சிறுசேமிப்பு திட்டங்களில் மாதாந்திர அல்லது அரையாண்டு, காலாண்டு வட்டி இனி கையில் தரப்படாது. வங்கி கணக்கு அல்லது, அஞ்சல் சேமிப்பு கணக்கில் மட்டுமே செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank Locker : வாடிக்கையாளர்களின் பொருட்கள் தொலைந்தால் வங்கிக்கு 100 மடங்கு அபராதம்!

இவ்வளவு சலுகைகள் கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை நீங்களும் தொடங்க வேண்டுமா? கஷ்டமே இல்லை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எளிமையாக இதை செய்யலாம். இதற்கு நீங்கள் முதலில் IPPB ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள் வேண்டும். பின்பு அதில் வரும் அக்கவுண்ட் ஓப்பனிங் ஆப்சனை கிளிக் செய்யுங்கள். அதில் பான் எண் மற்றும் ஆதார் நம்பரை கொடுத்து அப்டேட் கொடுங்கள். உடனே ஆதார் எண்ணில் கொடுக்கப்பட்ட பதிவு மொபைல் எண்ணுக்கு ஓரு ஓடிபி வரும். இது தவிர கல்வித் தகுதி, முகவரி, நாமினி விவரம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். வேண்டிய விவரங்களை கொடுத்த பிறகு சப்மிட் செய்யவும். இந்த அனைத்து விவரங்களையும் சரியாக கொடுத்த பின்னர், உங்களது அஞ்சல் கணக்கு தொடங்கப்பட்டு விடும். இது ஒரு போஸ்ட் ஆபீஸ் டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஆகும். இதை நீங்கள் 1 வருடத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

UIDAI : வெறும் 12 இலக்க நம்பர் மட்டும் தான் இருக்கும்! ஆதார் கார்டின் சூப்பரான அப்டேட்!

பின்னர், 1 வருடம் முடிவதற்குள் நீங்கள் நேரடியாக அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்திற்கு சென்று பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: India post, Post Office, Savings