போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பில் கூட ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் இருக்கு! தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க

போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பு

ஓய்வூதியம், உதவித்தொகை அல்லது எல்பிஜி மானியம் போன்ற அரசாங்க நன்மைகளைப் பெறுபவர்கள் கவனிக்கவும்.

 • Share this:
  அஞ்சலக சேமிப்பில் ஏகப்பட்ட சலுகைகளுடன் பல்வேறு விதமான சேமிப்பு கணக்குகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் முறை.

  தபால் சேமிப்புகளில் லாபம் அதிகம் என்பதைப் புரிந்து கொண்ட மக்கள் பலரும் இப்போது போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். போஸ்ட் ஆஃபிஸில் இருக்கும் சிறப்பான திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் விரும்புகின்றனர். இவர்களுக்கு இந்த கூடுதல் தகவல் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

  தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் கட்டாயம் என்பது அனைவருக்கும் தெரியும். இதில் வங்கிகளில் மட்டும் சேலரி கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் கிடையாது. அதே போல் அஞ்சலக சேமிப்பு கணக்குகளிலும் மினிமல் பேலன்ஸ் இல்லாத அக்கவுண்ட் உண்டு தெரியுமா? இந்த கணக்குகளுக்கு, அரசாங்கம் இறையாண்மை உத்தரவாதங்களை வழங்குகிறது, அதாவது தபால் அலுவலகம் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்தை திருப்பித் தரத் தவறினால், கணக்கு வைத்திருப்பவர்களின் இழப்புகளை அரசாங்கம் ஈடுகட்டும்.இந்த அக்கவுண்டில் பணம் எடுக்கும் வரம்பு ரூ .20,000 ஆகும்.

  also read.. சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு அதிக வட்டி பெற ஒரு வழி இருக்கு!

  யாரெல்லாம் ஓபன் செய்ய முடியும்?

  அரசாங்க நல திட்டங்களுக்காக பதிவுசெய்யப்பட்ட 18 வயதை கடந்தவர் யார் வேண்டுமானாலும் இந்த வகை கணக்கை திறக்கலாம்.ஒருவேளை மைனராக இருந்தால் அவரின் பாதுகாவலர் தொடங்க முடியும். ஒரே ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். இந்த கணக்கில் அரசாங்க நல திட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் மற்றவர்களாலும் இயல்பாக டெபாசிட் செய்யலாம்.

  ஓய்வூதியம், உதவித்தொகை அல்லது எல்பிஜி மானியம் போன்ற அரசாங்க நன்மைகளைப் பெறுபவர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸை வைத்திருக்க விரும்பபவில்லை என்றால் நீங்கள் தபால் அலுவலகத்தில் இந்த பூஜ்ஜிய இருப்பு கணக்கைத் திறக்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: