Home /News /business /

Post Office Account | போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனமாய் இருக்க வேண்டிய நேரம் இது.. ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சி!

Post Office Account | போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனமாய் இருக்க வேண்டிய நேரம் இது.. ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சி!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகளில் உள்ள இருப்புத்தொகைக்கு ஏற்றவாறு வட்டி வழங்கப்பட்டது

    போஸ்ட் ஆபீஸ் பேமெண்ட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி பணம் எடுப்பதற்கு மற்றும் வங்கியில் பணம் டெபாசிட் செய்வதற்கும் ஜனவரி 2022 முதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று புதிய அறிவிப்பை IPPB வெளியிட்டுள்ளது.

    வங்கியில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு பல்வேறு வரம்புகள் உள்ளன. ஒரு நாளில், இவ்வளவு தொகை தான் பணம் டெபாசிட் செய்ய முடியும் அல்லது எடுக்க முடியும் என்ற வரம்பு இருக்கிறது. உங்கள் ரொக்கப் பரிவர்த்தனைகளின் அளவு, வங்கியில் நீங்கள் எவ்வளவு காலமாக வாடிக்கையாளராக நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள், வங்கிக் கணக்கு வகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வங்கிகளால் முடிவு செய்யப்படும். குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமாக நீங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் போது அதற்கு பான் கார்டு உள்ளிட்ட அடையாளச் அட்டையை வழங்க வேண்டும்.

    மேலும், வங்கிக்கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகைக்கு மேல் டெபாசிட் செய்தாலும், பணம் எடுத்தாலும் அதற்கான கட்டணம் உங்கள் கணக்கில் வசூலிக்கப்படும். IPPB இல் பேசிக் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் எனப்படும் அடிப்படையான சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்கள் ஒரு மாதத்திற்கு நான்கு முறை இலவசமாக வங்கியிலிருந்து பணத்தை எடுக்கலாம்.

    நான்கு முறைக்கு மேல் நீங்கள் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு கட்டணம் விதிக்கப்படும். நீங்கள் வித்டிரா செய்யும் தொகையில் 0.50 சதவிகிதம் அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு குறைந்தபட்சம் 25 ரூபாய் என்ற அளவில் கட்டணம் விதிக்கப்படும். பேசிக் சேவிங்ஸ் அக்கவுண்டில் நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கட்டணமின்றி டெபாசிட் செய்யலாம்.

    மேலே குறிப்பிட்டுள்ள சேமிப்பு கணக்கை தவிர்த்து மற்ற சேமிப்பு கணக்குகள் மற்றும் கரண்ட் அக்கவுண்ட்டு ஆகியவற்றிற்கு, மாதம் ரூபாய் 25,000 கட்டணமின்றி பணத்தை வித்டிரா செய்து கொள்ளலாம். அதற்கு பின்பு வித்டிரா செய்யும் தொகையில் 0.50 சதவிகிதம் அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு குறைந்தபட்சம் 25 ரூபாய் என்ற அளவில் கட்டணம் விதிக்கப்படும்.

    Also Read : ஈஸியா நகைக்கடன் வாங்கலாம்.. வட்டியை ஆன்லைனில் செலுத்தினாலே போதுமாம்!

    பேசிக் சேவிங் அக்கவுண்ட் தவிர்த்து மற்ற சேமிப்பு மற்றும் கரண்ட் அக்கவுண்ட்களில் மாதம் ரூபாய் 10,000 வரை இலவசமாக டெபாசிட் செய்யலாம். அதற்கு பிறகு நீங்கள் வங்கியில் பணம் செலுத்தும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.50 சதவிகிதம் அல்லது ரூபாய் 25 கட்டணமாக வசூலிக்கப்படும்.

    மேலே குறிப்பிட்டுள்ள கட்டணங்கள் ஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

    Also Read :  இதையும் படிங்க..அவசியமான தகவல்.. போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் தொலைந்தால் உடனே செய்ய வேண்டியவை என்ன?

    இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றி அமைத்தது. அதன்படி டோர்-ஸ்டெப் சேவைக்கு ஒருவரும் கோரிக்கைக்கும் ரூபாய் 20 வசூலிக்கப்பட்டது.

    அதுமட்டுமின்றி சேமிப்பு கணக்குகளில் உள்ள இருப்புத்தொகைக்கு ஏற்றவாறு வட்டி வழங்கப்பட்டது என்பதையும் கடந்த ஜூலை மாதம் வங்கி அறிவித்தது. உங்களுடைய கணக்கில் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் இருந்தால் ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் வட்டியும் ஒரு லட்சத்திற்கு முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை இருந்தால் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் வழங்கப்படும். இந்த வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: India Post Internet Banking, Post Office, Savings

    அடுத்த செய்தி