ஹோம் /நியூஸ் /வணிகம் /

அவசியமான தகவல்.. போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் தொலைந்தால் உடனே செய்ய வேண்டியவை என்ன?

அவசியமான தகவல்.. போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் தொலைந்தால் உடனே செய்ய வேண்டியவை என்ன?

போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்

போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்

வங்கி பாஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவரின் புகைப்படம் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். ஆனால் போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்கில் புகைப்படம் இருக்காது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு, கூட்டு கணக்கு, சிறு சேமிப்பு திட்டங்களை தொடர்பவர்கள் கண்டிபாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ. உங்களது போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் பாஸ்புக் தொலைந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

  போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறுசேமிப்பு திட்டங்கள், ஆர்.டி கணக்குகள் நல்ல வட்டியுடன் வாழ்நாள் பயனையும் தருவதால் பலரும் அந்த திட்டங்களில் சேமிப்பை தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் . இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் பல்வேறு நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது.சமீபத்தில் கூட எச்.டி.எப்.சி வங்கியுடன் இணைந்து குறைந்த வட்டியும் ஹோம் லோன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

  அதுமட்டுமில்லை, விபத்து காப்பீடு திட்டங்களும் போஸ்ட் ஆபீஸில் செயல்பாட்டில் வந்துள்ளன. இவ்வளவு சேவைகளை கையாண்டுய் வரும் போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் தொடங்கியவர்களுக்கு கண்டிப்பாக பாஸ்புக் கொடுப்பது வழக்கமான நடைமுறை தான். எப்படி வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்கினால் பாஸ்புக் வழங்கப்படுமோ அப்படிதான் போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்கும். ஆனால் ஒரு சின்ன வித்யாசம் என்னவென்றால் வங்கி பாஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவரின் புகைப்படம் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். ஆனால் போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக்கில் புகைப்படம் இருக்காது.

  ஒருவேளை தவறுதலாகவோ அல்லது இயற்கை பேரிடர்களில் சிக்கி உங்கள் பாஸ்புக் தொலைந்து விட்டால் நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நீங்கள் கணக்கு வைத்திருக்கும் போஸ்ட் ஆபீஸில் அதற்கான நகல் புத்தகத்தை வாங்கி கொள்ளலாம்.

  இதற்கென ஒரு விண்ணப்பம் அஞ்சல் அலுவலகங்களில் உண்டு. அந்த படிவத்தை இந்த https://drive.google.com/file/d/1AGcka52vun51lWazt16-2I1YeKXgCu6F/view லிங்கில் பதிவிறக்க செய்ய கொள்ளலாம். இதற்காக ரூ. 50 கட்டணமும் செலுத்த வேண்டும்.

  படிவத்தை பூர்த்திசெய்து விண்ணப்பத்துடன் உங்கள் KYC ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். PRI அதிகாரிகள் இதை சரிபார்த்த பின்பு அடுத்தசில தினங்களில் அஞ்சலகத்திலிருந்து உங்கள் நகல் கணக்குப் புத்தகத்தை நீங்க பெற்றுக் கொள்ளலாம். கூட்டாகக் கணக்கு வைத்திருந்தால், இருவரும் விண்ணப்பத்தில் கையொப்பமிடுவது அவசியம். ஒருவர் மட்டும் கையொப்பமிடும்பட்சத்தில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Post Office, Savings