தபால் அலுவலக சேமிப்பு வங்கி (POSB) கணக்கு வைத்திருப்பவர்கள், தபால் துறையின் (DOP) வங்கி சேவைகளைப் பயன்படுத்தலாம். போஸ்ட் ஆஃபீஸ் இன்டர்நெட் பேங்கிங் சேமிப்புக் கணக்கிற்கு இடையே பணப் பரிமாற்றம் செய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடியது. அதே போல் இதன் மூலம் உங்கள் PPF மற்றும் SSY கணக்குகளிலும் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
எனவே, போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி பல சேவைகளை வீட்டில் இருந்தப்படியே செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் இதுவரை இன்டர்நெட் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் இந்த பதிவில் அதற்கான வழிமுறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.
இந்தியா போஸ்ட் இன்டர்நெட் பேங்கிங்கிற்கு பதிவு செய்வது எப்படி?
படி 1: அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று படிவத்தை நிரப்பவும்
(48 மணி நேரத்திற்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட
மொபைல் எண்ணுக்கு SMS எச்சரிக்கையைப் பெறுவீர்கள்)
படி 2: நீங்கள் SMS ஐப் பெற்றவுடன், DOP இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டலுக்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள "புதிய பயனர் செயல்படுத்தல்" ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்யவும்.
படி 3: வாடிக்கையாளர் ஐடி மற்றும் கணக்கு ஐடியை உள்ளிடவும் (வாடிக்கையாளர் ஐடி என்பது சேமிப்பு கணக்கு பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள CIF ஐடி ஆகும். உங்கள் சேமிப்பு கணக்கு எண் கணக்கு ஐடி).
ரேஷன் கார்டு இருக்கா? அப்ப இந்த அப்டேட்டுகளை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது!
படி 4: தேவையான தகவலை நிரப்பி, உங்கள் இணைய வங்கி உள்நுழைவு மற்றும் பரிவர்த்தனை கடவுச்சொற்களை அமைக்கவும்.
உள்நுழைவு மற்றும் பரிவர்த்தனை கடவுச்சொற்கள் ஒன்றாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்
படி 5: இப்போது உள்நுழைந்து உங்கள் பாதுகாப்பு கேள்விகள் மற்றும் பதில்கள் மற்றும் உங்கள் கடவுச்சொல்லை அமைக்கவும்.
மொபைல் பேங்கிங்கை எவ்வாறு செயல்படுத்துவது?
மொபைல் வங்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இந்தியா போஸ்ட் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின்படி, DoP மொபைல் பேங்கிங்கிற்குப் பதிவுசெய்த பிறகு, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்தியா போஸ்ட் மொபைல் பேங்கிங் செயலியைப் பதிவிறக்கம் செய்து, மொபைல் பேங்கிங்கைச் செயல்படுத்து விருப்பத்தைப் பயன்படுத்தவும்
Cook With Comali 3 : இதை செய்யாமல் என் உயிர் போகாது.. பாலா உருக்கம்!
படி 1: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து
மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனைப் பதிவிறக்கவும்
படி 2: 'ஆக்டிவேட் மொபைல் பேங்கிங்' டேப்பில் கிளிக் செய்யவும்
படி 3: பாதுகாப்புச் சான்றுகளை உள்ளிட்டு OTP ஐ உள்ளிடவும்
படி 4: உங்கள் செயல்படுத்தல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, நீங்கள் mpin ஐ பதிவு செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் மொபைல் பேங்கிங்கை ஈஸியாக பயன்படுத்தலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.