• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • உங்கள் பணத்திற்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வட்டி... இப்படியொரு வாய்ப்பை மிஸ் பண்ணலாமா?

உங்கள் பணத்திற்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வட்டி... இப்படியொரு வாய்ப்பை மிஸ் பண்ணலாமா?

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் திட்டம்

முதலீடு தொகைக்கு ஆண்டு வட்டியாக ரூ.29,700 வட்டியாக பெற முடியும்.

  • Share this:
    உங்கள் பணத்திற்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வட்டி கிடைக்கும் ஒரே இடம் அஞ்சலகம தான். இப்படியொரு சூப்பரான வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.

    சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் சரியான நேரத்தில் சரியான திட்டத்தில் முதலீடு செய்வது. சரியான திட்டத்தில் முதலீடு செய்தால் தான் பெரிதான லாபம் கிடைக்கும். பெரிதான லாபம் கிடைத்தால் தான் வருவாய் பெருகும். லாபம் எப்படி முக்கியமோ அதைப்போல் பணத்திற்கு பாதுகாப்பும் அவசியம். மாதம் வருமானம் வர வேண்டும், முதிர்வு தொகை நல்ல லாபத்தை தர வேண்டும் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் முதலீட்டாளர்களுக்கு இருப்பது இயல்பு தான். இந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் திட்டம் திட்டம் அஞ்சல சேமிப்பில் இயங்கும் போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருவாய் திட்டம்.

    18 வயது பூர்த்தி அடைந்த நபர் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து பணத்தை சேமிக்கலாம். தனியாகவோ அல்லது ஜாயிண் அக்கவுண்டாகவும் பணத்தை சேமிக்கலாம். 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4.5லட்ச ரூபாய் வரை இதில் முதலீடு செய்ய அனுமதி உண்டு. ஜாயிண் அக்கவுண்டாக தலா 4.5 லட்சம் என பிரித்து 9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 4.5 லட்சம் முதலீடுக்கு ஆண்டு வட்டியாக ரூ.29,700 வட்டியாக பெற முடியும். இதுவே 9 லட்சம் என்றால் ரூ. 59,400 வட்டி மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். லட்ச கணக்கில் தான் முதலீடு செய்ய வேண்டுமோ என்ற பயம் வேண்டாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரூ.1000 முதல் உங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்யலாம் அதற்கு ஏற்றார் போல் வட்டி மற்றும் முதிர்வு தொகை கிடைக்கும். அஞ்சல் கணக்கு தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல அந்த முதலீட்டுத் தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்த வட்டித்தொகை வழங்கப்படும். ஒரு சரியான முதலீடு திட்டத்திற்கு காத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க>



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: