சேமிப்பு திட்டத்தில் லட்சங்களில் வருமானம் பெற இதுதான் ஒரே வழி!

சேமிப்பு திட்டங்களில் நல்ல வருமானம்

வட்டில் எல்லாம் சேர்த்து மொத்தமாக 7 லட்சம் உங்கள் கையில் கிடைக்கும்.

 • Share this:
  நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேமிப்பு திட்டம் உங்களுக்கு லட்சங்களில் லாபல் தந்தால் அதைவிட மிகச் சிறந்த தேர்வு வேறு இல்லை.

  சேமிப்பு கணக்கு என்றவுடன் பலரும் வங்கி சேமிப்பு கணக்கு என நினைத்திருப்பீர்கள். இல்லை, இங்கு நாம் காண இருப்பது அஞ்சலக சேமிப்பில் இருக்கும் மிகச் சிறந்த வருமானத்தை பெருக்கும் திட்டமான ரெகரிங் டெபாசிட் . இதுப்பற்றி இதுவரை கேள்விபடாதவர்கள் இன்று விவராமாக தெரிந்து கொள்ளுங்கள். காரணம் வருமானத்தை பெருக்கும் ஒரு சிறந்த முதலீடு திட்டத்தை நீங்கள் தேடி கொண்டிருந்தால் இது உங்களுக்கு நிச்சயம் கைக்கொடுக்கும்.

  எப்போதுமே தபால் அலுவலக முதலீட்டுத் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் கம்மியான முதலீடு தொகையைக் கொண்டு சேமிப்பை தொடங்கினாலும் உங்களுக்கு லட்சங்களில் முதிர்வு தொகை உறுதி. வட்டியும் நல்ல விகிதத்தில் சேர்த்து அளிக்கப்படும். இந்த ரெகரிங் டெபாசிட் திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள். ஆண்டுக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகை உச்ச வரம்பு எதுவும் இல்லை. தனியாகவோ இரண்டு நபர்களோ இணைந்து முதலீடு செய்யலாம். சிறுவர்களின் பெயரிலும் பெற்றோர் கணக்கு திறந்துகொள்ளலாம்.

  also read..இந்தியன் வங்கி செக் புக் உங்க கிட்ட இருக்கா? அப்ப உடனே இதை செஞ்சிடுங்க!

  கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தேர்வு செய்யும் சிறந்த முதலீடு திட்டமாக இது இருக்கும். உங்கள் பிள்ளைகளின் 6 வயதில் நீங்கள் இதை தொடங்கினால் கட்டாயம் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல வருமானத்தை நீங்கள் அவர்களுக்கு பரிசளிக்கலாம். அதாவது, நீங்கள் மாதம், 10,000 ரூபாய் டெபாசிட் செய்வதாக வைத்துக்கொள்வோம். ஐந்து ஆண்டுகள் மெச்சூரிட்டிக்கு பின் உங்கள் பணம் ரூ. 6,96,967 ரூபாயாக மாறியிருக்கும். வட்டில் எல்லாம் சேர்த்து மொத்தமாக 7 லட்சம் உங்கள் கையில் கிடைக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: