• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா? இந்த ரூல்ஸ் மாறிடிச்சு உங்களுக்கு தெரியுமா?

போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா? இந்த ரூல்ஸ் மாறிடிச்சு உங்களுக்கு தெரியுமா?

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

பலருக்கும் இதுக்குறித்த சந்தேகங்கள் உள்ளன. அதனால் இங்கு மாற்றப்பட்டட்டுள்ள விதிமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்

  • Share this:
    போஸ்ட் ஆஃபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு. இதையெல்லாம் நோட் பண்ணிக்கோங்க.

    மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி முதலீட்டாளர்கள் என பலரும் அஞ்சல் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல பென்சன் திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள், நீண்ட கால சேமிப்பு என பல ஸ்கீம்களில் ஜாயிண்ட் அக்கவுண்ட் பங்கு அதிகம் உள்ளது. அதனாலே பலரும் தனிக் கணக்கு மற்றும் இணைப்பு கணக்கு இரண்டையும் பராமரிக்கின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆஃபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு. அக்டோபர் 1 ஆம் தேதி முதலே சில விதிமுறை மாற்றங்கள் அஞ்சல் சேமிப்பில் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் அடுத்த வருடம் 2022 செப்டம்பர் மாதம்30  வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்லது. இருப்பினும் பலருக்கும் இதுக்குறித்த சந்தேகங்கள் உள்ளன. அதனால் இங்கு மாற்றப்பட்டடுள்ள விதிமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

    போஸ்ட் ஆபீஸ் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் பாயின்ட் ஆஃப் சர்வீஸ் மூலம் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனையில் 1% செலுத்த வேண்டும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்சம் 5 ரூபாய் என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். போஸ்ட் ஆபீஸ் ஏடிஎம்களில் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, வாடிக்கையாளர்கள், முதல் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5+ஜிஎஸ்டி செலுத்தவேண்டும். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளில், மெட்ரோ நகரங்களில் 3 இலவச பரிவர்த்தனைகள், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகள், அதை தாண்டினால் ரூ.8 +ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.போஸ்ட் ஆபீஸ் ஏடிஎம்களில் முதல் 5 இலவச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ.10+ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

    போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேமித்தால் லாபம் நிச்சயம்..ஆபத்து இல்லாத முதலீடு!

    சேமிப்பு கணக்கில் பேலன்ஸ் இல்லாததால் ஏடிஎம் அல்லது பிஓஎஸ் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டால், வாடிக்கையாளர் அதற்காக ரூ.20 செலுத்த வேண்டும்.அஞ்சலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ் தகவல்களுக்கு இப்போது ரூ.12 + ஜிஎஸ்டி வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும். ஏடிஎம்/டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி. ஏடிஎம் கார்டை இழந்தால், மற்றொரு கார்டைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அஞ்சலக சேமிப்பில் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்த விதிமுறைகள் இவை தான். தெரியாதவர்கள் இனியாவது தெரிந்து கொண்டு கவனமாய் இருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: