ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஒருமுறை தான் முதலீடு.. உங்கள் வாழ்வை மாற்ற போகும் சேமிப்பு திட்டம் இதுதான்!

ஒருமுறை தான் முதலீடு.. உங்கள் வாழ்வை மாற்ற போகும் சேமிப்பு திட்டம் இதுதான்!

போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட்

போஸ்ட் ஆஃபீஸ் அக்கவுண்ட்

5 ஆண்டுகளில் உங்கள் சேமிப்பு முடிந்து பணமும் உங்கள் கைக்கு கிடைத்துவிடும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உங்கள் வாழ்வை மாற்ற போகும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டமான டைம் டெபாசிட் குறித்த விரிவான தகவல்களை பற்றி பார்க்க போகிறோம்.

சமீப காலமாக வங்கியை காட்டிலும் பொதுமக்களிடம் அஞ்சல் சேமிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம் அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல்வேறு வகையான சிறந்த சேமிப்பு திட்டங்கள், பணத்திற்கு பாதுகாப்பு. இதை எல்லாம் தாண்டி வட்டியும் மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் அஞ்சல் சேமிப்பில் இருக்கும், நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களில் இந்த டைம் டெபாசிட் திட்டமும் ஒன்று. அதுக்குறித்து இன்று தெரிந்து கொள்ள போகிறோம். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் சில ஆண்டுகளில் உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். நல்ல வருவாய் தரும் திட்டமாக இது உள்ளது. முதலீடு ஆண்டுகள் கூட மிக மிக குறைவு. டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.

குறிப்பாக வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருமுறை டெபாசிட் செய்தாலே போதும் உங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். குறைவாக முதலீடு செய்ய வேண்டுமென்றால் மாதம் குறைந்தபட்சம் டெபாசிட் ரூ. 1000 முதல் தொடங்குகிறது. அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. முதலீட்டாளர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையில் சலுகை வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு பின்பு உங்களின் முதலீடு அப்படியே இரட்டிப்பாகி உங்களுக்கு முதிர்வு தொகையாக கிடைக்கும். டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டு சேமிப்புக்கு 6.7 சதவீத வட்டி கிடைக்கிறது. நீங்கள் தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால் 5.5 சதவீத வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 6.7 சதவீதத்தில் வட்டியைப் பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

பணத்தை சேமிக்க வேண்டும், நல்ல முதலீடு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு டைம் சேமிப்பு திட்டம் ஒரு நல்ல தேர்வாகும். அதுமட்டுமில்லை வரிச்சலுகையுடன் கிடைக்கும் சேமிப்பு திட்டமாகவும் இது உள்ளது. இந்த திட்டத்தில் 1, 2, 3, 5 வருடங்கள் வரை நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் குறைந்த கால அலவில் லாபம் பெற முடியும். முதலீடு என்றாலே 20 ஆண்டுகளுக்கு மேல் இல்லாமல்  5 ஆண்டுகளில் உங்கள் சேமிப்பு முடிந்து பணமும் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் உங்களது முதலீடு இருமடங்காகும். மிகவும் பாதுகாப்பான முதலீடு திட்டமாகவும் இது இருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு திட்டம் ஆகும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Post Office