• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஆயிரங்களில் பணத்தை போட்டால் லட்சங்களில் லாபம்.. அஞ்சல் சேமிப்பில் இதை மிஸ் செய்யாதீங்க!

ஆயிரங்களில் பணத்தை போட்டால் லட்சங்களில் லாபம்.. அஞ்சல் சேமிப்பில் இதை மிஸ் செய்யாதீங்க!

 பொது வருங்கால வைப்புநிதி சேமிப்பு திட்டம்

பொது வருங்கால வைப்புநிதி சேமிப்பு திட்டம்

வட்டி தொகை எல்லாம் சேர்த்து மொத்த முதிர்வு தொகையாக ரூ.18,98,498. உங்கள் கைக்கு கிடைக்கும்.

  • Share this:
    அஞ்சல் சேமிப்பில் ஆயிரங்களில் பணத்தை போட்டால் லட்சங்களில் லாபம் தரும் சூப்பரான பொது வருங்கால வைப்புநிதி சேமிப்பு திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

    இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். ஏனென்றால், கொரோனா வைரஸ் போன்ற எதிர்பாராத தாக்கம் காரணமாக தினக்கூலியை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கானோர் மாதக்கணக்கில் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், அவர்களின் பொருளாதாரம் முடங்கி அன்றாட பொழுதைக்கூட நகர்த்த முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த காலக்கட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சேமிப்பின் அவசியத்தை மக்களிடையே புரிய வைத்திருக்கிறது. அந்த வகையில் நல்ல லாபம், வருமானம் இல்லாத சமயத்தில் கைக்கொடுக்கு பொது வருங்கால வைப்பு நிதி திட்டதம் பற்றி இன்று பார்க்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்திய குடிமக்களாக இருக்கும் அனைவரும் தங்களுக்கு அருகில் இருக்கும் அஞ்சலகத்திலோ, வங்கிகளிலோ PPF சேமிப்புக் கணக்கை தொடங்கலாம்

    இந்த திட்டத்தில் ஒருவரின் பொது வருங்கால வைப்புநிதி சேமிப்பு கணக்கு முதிர்வு காலத்தை எட்டியிருந்தால், அவர் வரி விலக்குடன் முழுத் தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் அவரது சேமிப்பு கணக்கு முடித்துவைக்கப்படும். நிலையான வைப்பு நிதித் திட்டத்தில் உங்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது வருடாந்திர அளவில் நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. காலாண்டு அடிப்படையில் வழக்கமான வட்டி வருமானத்தை ஈட்ட, குறைந்தபட்ச வயது வரம்பு 60 கொண்ட முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் ரூ .15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

    sbi-யில் லாபம் தரும் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்குவது இவ்வளவு ஈஸியா?

    ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். இப்போது இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.6,000 முதலீடு செய்து வந்தால், பிபிஎஃப் வட்டி விகிதம் தற்போது 7.1% ஆக உள்ளது. 15 வருட முடிவில் உங்கள் வட்டி தொகை எல்லாம் சேர்த்து மொத்த முதிர்வு தொகையாக ரூ.18,98,498. உங்கள் கைக்கு கிடைக்கும். இதே தொகையை அடுத்த 5 வருடங்களுக்கு நீட்டித்தால், 20 வருடம் கழித்து, உங்களது முதிர்வு தொகை ரூ. 31,07,201. இதுப்போல் முதிர்வு காலங்களை அடிப்படையாக கொண்டு முதிர்வு தொகையும் மாறுபடும். அதே நேரம் இரட்டிப்பு லாபமும் பார்க்கலாம். எனவே முதலீடு தொடங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி சேமிப்பு திட்டம் ஒரு நல்ல தேர்வாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: