முகப்பு /செய்தி /வணிகம் / போஸ்ட் ஆஃபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் இருக்கா? அப்ப நீங்க இந்த தகவலை தெரிஞ்சிக்கிறது முக்கியம்!

போஸ்ட் ஆஃபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் இருக்கா? அப்ப நீங்க இந்த தகவலை தெரிஞ்சிக்கிறது முக்கியம்!

அஞ்சல் சேமிப்பு

அஞ்சல் சேமிப்பு

மூன்று பேரில் ஏதேனும் ஒருவருக்கு மட்டுமே செட்டில்மெண்ட் தொகை வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உங்களுக்கு போஸ்ட் ஆஃபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் இருக்கா? அப்ப கண்டிப்பாக நீங்க இந்த தகவலை தெரிஞ்சிக்கிறது ரொம்ப முக்கியம்.

மிடில் கிளாஸ் மக்கள் தொடங்கி முதலீட்டாளர்கள் என பலரும் அஞ்சல் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல பென்சன் திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள், நீண்ட கால சேமிப்பு என பல ஸ்கீம்களில் ஜாயிண்ட் அக்கவுண்ட் பங்கு அதிகம் உள்ளது. அதனாலே பலரும் தனிக் கணக்கு மற்றும் இணைப்பு கணக்கு இரண்டையும் பராமரிக்கின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆஃபீஸில் இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வந்துள்ள புதிய விதிமுறை மற்றும் சேவை மாற்றங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த புதிய விதிமுறை மாற்றத்தை மத்திய அரசு போஸ்ட் ஆஃபீஸ் வாடிக்கையாளர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது. அதாவது, இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை எவ்வாறு பிரித்து வழங்கப்படும் அதற்கான செயலாக்கம் எப்படி இருக்கும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இணைப்பு கணக்கை மூடும் போது டூப்ளிகேட் பாஸ்புக்குக்கு விண்ணப்பிப்பது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செட்டில்மெண்ட் தொகையானது 2 வகையில் பிரித்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில் இணைப்பு கணக்கில் இருக்கும் ஏ மற்றும் பி வகைகளை பார்க்கலாம். அதாவது போஸ்ட் ஆஃபீஸில் செயல்பாட்டில் இருக்கும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் இந்த இரண்டு திட்டத்திலும் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே இணைப்புக் கணக்கு திறக்க முடியும் என்பது பொதுவான விதிமுறை இதில் ஏ பிரிவில் மூன்று பேருக்கு அல்லது கணக்கு உரிமையாளருக்கு செட்டில்மெண்ட் தொகை வழங்கப்படும். ஆனால் பி பிரிவில் மூன்று பேரில் ஏதேனும் ஒருவருக்கு மட்டுமே செட்டில்மெண்ட் தொகை வழங்கப்படும்.

அதுமட்டுமில்லை இந்த வகையில் அக்கவுண்ட் தொடர்பான சேவையை ஒருவர் மட்டுமே கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடர்பவர்கள் போஸ்ட் ஆஃபீஸூக்கு ஒருமுறை சென்று உங்கள் சந்தேகங்களை தெளிப்படுத்தி கொள்ளவும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Post Office