• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • post account : இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் பணத்தையும் சேமிக்கலாம்.. அதற்கான வட்டியையும் சேமிக்கலாம்!

post account : இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் பணத்தையும் சேமிக்கலாம்.. அதற்கான வட்டியையும் சேமிக்கலாம்!

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ்

போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாதாந்திர வருமானத் திட்டம் குறைவான அளவில் பணத்தை சேமிக்க விரும்பவர்களுக்கானது.

  • Share this:
    போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாதாந்திர வருமானத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் கிடைக்கும் சலுகைகளை பற்றிய பதிவு.

    இந்திய தபால் துறை மாதாந்திர வருமானத் திட்டம் மட்டுமல்லாமல் பல சேமிப்புத் திட்டங்களை கொண்டுள்ளது. அவை, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (போசோ), 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி), தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD), தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உள்ளிட்ட திட்டங்கள் உள்ளது. உங்கள் வசதிக்கேற்ப திட்டத்தை தேர்ந்தெடுத்து சேமிப்புக் கணக்கை துவங்கி சேமிக்கலாம். மேலும் இந்திய தபால் துறையின் இணையள பக்கத்தையோ, அல்லது தபால் அலுவலகத்தையோ அணுகி மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

    போஸ்ட் ஆபீஸ் வழங்கும் மாதாந்திர வருமானத் திட்டம் குறைவான அளவில் பணத்தை சேமிக்க விரும்பவர்களுக்கானது. இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்கில் (Joint account) அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரையும் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் டிடிஎஸ் இல்லாததால், பிரிவு 80C கீழ் கிடைக்கும் நன்மைகள் இதில் கிடைக்காது. மேலும் இதில் கிடைக்கும் வட்டிகளுக்கு வரி உண்டு.

    ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.அஞ்சலகத்தின் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது சிம்பிள் (Simple interest ) தான். நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல அந்த முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது.நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவும். வாழ்நாள் சேமிப்புக்கு ஒரு நல்ல முதலீடாக இந்த மாதாந்திர திட்டம் இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: