Home /News /business /

உங்கள் பான்கார்டு தொலைந்தால் உடனே இதை செய்யுங்கள்... தவறினால் ரூ.10,000 அபராதம்

உங்கள் பான்கார்டு தொலைந்தால் உடனே இதை செய்யுங்கள்... தவறினால் ரூ.10,000 அபராதம்

பான் கார்டு

பான் கார்டு

PAN Card | இரண்டு பான்கார்டு வைத்திருப்பவர்கள் வருமானவரித்துறையிடம் ஒரு கார்டை சமர்ப்பிக்காவிடில், வருமானவரிச்சட்டம் 1961 இன் பிரிவு 272B இன் விதிகளின்படி ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என யாராக இருந்தாலும், இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டினாலோ அல்லது வங்கிகளில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாலோ நிச்சயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இந்த நிரந்தர கணக்கு எண் என்றழைக்கப்படும் பான்கார்டை வருமான வரித்துறை வழங்கி வருகிறது. 10 இலக்க எண்களுடன் பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் வழங்கப்படும் இந்த கார்டை பயன்படுத்தி வருமான வரி கட்டுவது, வீடு, நிலம் வாங்க, விற்க, மிகப்பெரிய பணவரித்தனையை கண்காணிப்பது, வரி் ஏய்ப்பு போன்றவற்றை கண்காணிக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே பான் கார்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. புதிதாக வங்கிக்கணக்கு துவங்குவதற்கும் அவசியம் என்ற உத்தரவையடுத்து மக்கள் ஆன்லைன் மற்றும் கம்யூட்டர் சென்டர்கள் உதவியோடு பான்கார்டுக்கு அப்ளை செய்கின்றனர். இரண்டு போட்டாக்கள் உங்களின் முகவரிச்சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்து ஒரு வாரக்காலத்திற்குள் பான் கார்டை பெற்றுவிட முடியும்.

இப்படி பான் கார்டை ஆன்லைன் வாயிலாகப் பெறும் நாம், சில நேரங்களில் தொலைத்துவிடுவோம். பின்னர் அவசியம் கருதி மீண்டும் விண்ணப்பிக்கும் போது இரண்டு கார்டுகள் உள்ளது போன்று காண்பிக்கும்.இன்னும் சிலரோ, டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருப்பார்கள். இவ்வாறு வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு பான் கார்டு வைத்திருப்பதும், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமானவரிச்சட்டம் 1961 இன் பிரிவு 272B இன் விதிகளின்படி சட்டப்படி குற்றமாகும். இச்சட்டத்தின் படி ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read : ஒரு ரூபாய் முதலீடு செய்யாமல் லட்சங்கள் சம்பாதிக்கலாம்.. ஒரு கம்ப்யூட்டர் மட்டும் போதும்.. அதற்கான டிப்ஸ்

இந்நிலையில் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் முதலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என இங்கே அறிந்துக்கொள்வோம்.

நீங்கள் என்.எஸ்.டி. எல் ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html அல்லது வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.

இரண்டு பான் கார்டு இருந்தால் ஒரு கார்டை சமர்ப்பிப்பதற்கென்று ஒரு படிவம் வழங்கப்படும். இந்த படிவத்தில் நீங்கள் எந்த பாண் எண்ணை தொடர்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்களோ? அந்த பான் எண்ணை குறிப்பிட்டு, மீதமுள்ள பான் தகவலை பார்ம் எண் 11 படிவத்தில் நிரப்ப வேண்டும்.இந்த படிவத்துடன் ரத்து செய்யப்பட வேண்டிய பான் கார்டை நகலெடுத்து இணைப்பது அவசியம். எனவே இரண்டு பான் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக இந்த முறையை நீங்கள் பின்பற்றி வருமான வரித்துறைக்கு அபராதத்தொகையைக் கட்டாமல் தப்பித்து கொள்ளுங்கள்.

Also Read : கோடீஸ்வரர் ஆக எதில் முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு செய்ய வேண்டும்? முழு விபரம்!

பொதுவாக நீங்கள் வசிக்கும் மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாறினால் பான் கார்டை மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம் உங்களது கார்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பிறந்த தேதி மற்றும் முகவரி கொண்ட ஐடி, பழைய கார்டு நகல் ஆகியவற்றின் உதவியோடு பான் கார்டில் திருத்தம் செய்யலாம்.
Published by:Selvi M
First published:

Tags: India, Pan card

அடுத்த செய்தி