பிறந்த குழந்தை முதல் 12 வயது வரை உள்ள குழந்தையின் பெற்றோரா நீங்கள்? அப்ப கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு தான் முக்கியம் தெரிஞ்ச்சிக்கோங்க.
இப்போதெல்லாம் பிள்ளைகளை விட பெற்றோர்கள் அட்வான்சாக யோசிக்க தொடங்கி விடுகிறார்கள். குழந்தை பிறந்த உடனே அதற்காக கல்வி செலவு, மருத்துவ செலவு, சொந்த வீடு, வெளிநாட்டில் வேலை உடனே திட்டமிட்டு இப்பவே ஓட தொடங்கிவிடுகிறார்கள். காரணம் இருக்கு பரபரப்பு நிறைந்த வேலை சூழ் உலகில் எதற்கும் உத்தரவாதம் இல்லாமல் போயிவிட்டதால் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வேலை உத்தரவாதம் இல்லை என்பதால் முடிந்தவரை சீக்கிரமாக சம்பாதித்து பிள்ளைகளுக்காக சேமித்து வைத்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. அந்த சேமிப்பை அப்படியே ஸ்மார்ட்டாக செய்தால் இன்னும் நல்லது.
சேமிப்பில் எப்போதுமே பாதுகாப்பு முக்கியம் அதைவிட முக்கியம் நன்மைகள். ஒருவேளை உங்கள் வீட்டில் 12 வயதுக்கு குறைவாக பிள்ளைகள் இருந்தால் நீங்கள் அவர்களுக்காக எல்.ஐ.சியில் இருக்கும் Children Money Back Plan குறித்து யோசிக்கலாம். குறைந்த முதலீடுட்டில் இந்த காப்பீடு திட்டம் நிறைய நன்மைகளை தருகிறது. இதுக் குறித்த முழு விபரங்களையும் இப்போது பார்க்கலாம்.
எல்.ஐ.சியில் இருக்கும் சூப்பரான பாலிசி திட்டத்தில் இதுவும் ஒன்று. பிறந்த பிறந்த குழந்தை முதல் 12 வயது வரை உள்ள குழந்தையின் பெற்றோர்கள் தந்தை அல்லது தாய் யாரேனும் குழந்தைகள் பெயரில் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உத்தரவாத இன்சூரன்ஸ் தொகை ரூ.10,000. அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. உங்களின் வருமானத்தை பொருத்து நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த பாலிசியின் முதிர்வு காலம் மொத்தம் 25 ஆண்டுகள் என நிர்ணியிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் குழந்தைகளின் எந்த வயதில் பாலிசியை தொடங்குகிறீர்களோ அதிலிருந்து 25 ஆண்டுகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதுபோக உங்கள்
குழந்தைக்கு 18, 20, 22 வயது ஆகும் போது மருத்துவ செலவு, அவசர செலவு, கல்வி செலவு எதற்கு வேண்டுமானாலும் பாலிசி தொகையில் இருந்து 20 சதவீத தொகையை எடுத்துப் பயன்படுத்தலாம். மீதம் இருக்கும் 40 சதவீத பாலிசி பணத்தை 25 ஆண்டுகள் முழுமையாக முடிந்தவுடன் தான் எடுக்க முடியும். அதுமட்டுமில்லை இறப்பை சந்திக்க நேரிட்டால் பிரீமியம் தொகையில் 105 சதவீதம் வரை செட்டில்மெண்ட் செய்யப்படும். அதே போல் இந்த
பாலிசி மீது கடன் பெறும் வசதியும் உண்டு. கூடுதல் விவரங்கள் எல்.ஐ. சி முகவரை அணுகி Children Money Back Plan பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சேமிப்பை சீக்கிரமாக தொடங்குங்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.