ஒரு நாட்டின் ஆரோக்கியமான மக்கள்தொகையின் அடிப்படையில் தான் நாட்டுடைய GDP கணக்கிடப்படுகிறது. மோசமான ஹெல்த் கேர் சிஸ்டம் மற்றும் மருத்துவக் காப்பீடு எவ்வளவு உதவிகரமானது என்பது பற்றிய எந்த தகவலும் தெரியாமல் இருப்பதும் இந்தியாவில் இன்ஷூரன்ஸ் அதிகமாகப் பயன்படுத்தபடுவது இல்லை. மருத்துவ செலவுகள் என்று வந்தாலே, 75% மக்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்கிறார்கள். இத்தகைய சூழலில், தீவிரமான அல்லது மோசமான நோய் ஒன்று குடும்பத்தில் ஒருவரை பாதிக்கும் போது, சேமிப்புகள் கரைவது மட்டுமல்லாமல், பெரிய கடனையும் ஏற்படுத்தி குடும்பத்தின் நிதி மற்றும் பொருளாதார நிலையை குலைத்து விடுகிறது.
ஊழியர்களுக்கு நிறுவனங்களில் வழங்கப்படும் அடிப்படை மருத்துவக் காப்பீடு, பெரிய நோய்களுக்கு தேவைப்படும் செலவுகளை ஈடு செய்யாது. எனவே, இத்தகைய சூழலில் கைகொடுப்பது, கிரிடிக்கள் இல்நெஸ் பாலிசி எனப்படும் தீவிர நோய்க்கான மருத்துவக் காப்பீடு.
மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதிக பணம் தேவைப்படும் நோய்களுக்கான கவரேஜை வழங்கும் ஒரு குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தால், அனைவருமே பணம் இல்லை என்ற பிரச்சனை இன்றி, நல்ல தரமான மருத்துவ சிகிச்சையைப் பெறலாம். உதாரணமாக, தீவிரமான நோய்களாகக் கருத்தப்படும் பக்கவாதம், கிட்னி, லிவர் போன்ற உறுப்பு செயலிழப்பு ஆகியவை இத்தகைய காப்பீட்டில் அடங்கும்.
இதையும் படிங்க.. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? நீங்கள் இந்த சேமிப்புகளை கட்டாயம் தொடங்க வேண்டும்
அடிப்படை மருத்துவ காப்பீட்டை விட தீவிர நோய் காப்பீட்டின் பிரீமியம் தொகை அதிகமாக இருந்தாலும், காப்பீட்டின் கவரேஜ் தொகை மற்றும் கவரேஜ் செய்யப்படும் நோய்களின் பட்டியல் ஆகியவை அதிக பயன்களைத் தரும்.
சாதாரண மருத்துவ பாலிசிக்கும் தீவிர நோய் காப்பீட்டுக்கும் உள்ள வித்தியாசம்
வழக்கமான மருத்துவ அல்லது உடல் நலக் காப்பீட்டில், நீங்கள் செய்த மருத்துவ செலவுகளுக்கு க்ளைம் வழங்கப்படும். ஆனால், கிரிடிகல் இல்னஸ் காப்பீட்டில், பாலிசிதாரருக்கு தீவிர நோய் இருப்பது கண்டறியப்பட்டால், சிகிச்சைக்காகவும் மருத்துவ செலவுகளுக்கும் ஒரு பெரிய தொகை வழங்கப்படும்.
கிரிடிக்கல் இல்னஸ் பாலிசியில் பலவித நன்மைகள் உள்ளன.
- தீவிரமான நோய்களுக்கான மருத்துவ செலவுகளை வழங்குகிறது. இதனால் கடன் அல்லது நிதிச்சுமையை தவிர்க்கலாம்
- நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பணியில் இருப்பவராக இருந்தால், பல நாட்கள் முதல் மாதங்கள் வரை விடுமுறை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, இதனால் ஏற்படும் வருமான இழப்பையும் இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் கவர் செய்யும்.
- பாலிசியில் வழங்கப்படும் கணிசமான தொகையில் குறிப்பிட்டத் தொகையை குடும்பச் செலவுகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
- இந்த பாலிசியின் மூலம் வருமான வரி பிரிவு 80D இன் கீழே, வரிச்சலுகை பெற முடியும்.
தீவிர நோய்க்கான மருத்துவ காப்பீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன
பெரும்பாலான தீவிர நோய்களுக்கு இந்த திட்டத்தில் கவரேஜ் வழங்கப்பட்டாலும், எந்த வகையான நோய்க்கு உங்களுக்கு கவரேஜ் வேண்டும் என்பதை நீங்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
SBI விடுத்த எச்சரிக்கை.. மொபைலுக்கு இப்படி மெசேஜ் வந்தால் ஜாக்கிரதையா இருங்கள்!
எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்பதும் அவசியம். அதிக தொகைக்கு எடுத்தால் அதிக பிரீமியம் செலுத்த வேண்டும், குறைவான தொகைக்கு எடுத்தால் சிகிச்சைக்கான செலவுகளுக்கு பணம் போதாமல் போகும் சூழல் ஏற்படலாம். எனவே, சரியான பாலிசியை வாங்க, நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம்.
பொதுவாக, முக்கிய மருத்துவ செலவுக்கு கவரேஜ் வழங்கப்படும். ஆனால், இதர செலவுகளான மருத்துவமனையில் அறை வாடகை, பரிசோதனை செலவுகள், சிகிச்சை முடிந்த பின்பு போஸ்ட்-கேர் செலவுகள், மருந்து செலவுகள், மருத்துவ வாகன செலவுகள் என்று வேறு எந்த வகையான செலவுகளை கவர் செய்கிறது எனபதையும் கவனிக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.