பிரபல வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
சேமிப்பு கணக்கு என்பது அவசியமான ஒன்று. அதிலும் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு முன்பு நல்ல வட்டி கிடைக்கும் வங்கியை தேர்ந்தெடுப்பது அவசியம். அதே போல் பொத்துறை வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது எப்போதுமே பயன் தரும். அது தவிர, தனியார் வங்கிகளை தேர்ந்தெடுக்கும் போது வட்டி விகிதங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஒருமுறை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காரணம், சேமிப்பு கணக்கில் நல்ல வட்டி என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிட்டிருந்தால் இந்த தகவலை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
பி.என்.பி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கில் அளிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் டிசம்பர் 1 முதல் மாற்றப்படவுள்ளன. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, பிஎன்பி வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 2.90 சதவீதத்தில் இருந்து 2.80 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஅதாவது ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும் சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 2.80 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
10 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2.80% வட்டியும் 10 லட்சத்துக்கு அதிகமான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2.85% வட்டியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிசம்பர் 1 ஆம் தேதி முதலே இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது என்பது கூடுதல் தகவல்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.