ஹோம் /நியூஸ் /வணிகம் /

அவர்களுக்கு மட்டும் ரூ. 8 லட்சம் வரை கடன் தர்றோம்.. பிரபல வங்கியின் சூப்பர் அறிவிப்பு!

அவர்களுக்கு மட்டும் ரூ. 8 லட்சம் வரை கடன் தர்றோம்.. பிரபல வங்கியின் சூப்பர் அறிவிப்பு!

இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

இந்த கடனுக்கு வாடிக்கையாளர்கள் ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பரைப் பதிவிட்டாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தனிநபர் கடன் (பர்சனல் லோன்) வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது, அதனை வாங்கி சில ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற யோசனை வரும். ஆனால், அனைவருக்கும் இந்த தனிநபர் கடனுக்கான வட்டிவிகிதம் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அவர்களின் வருமானம், கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவைகளைப் பொறுத்தே வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும் என்பதால், பர்சனல் லோன் எடுப்பது முழுக்க முழுக்க விருப்பம் மற்றும் தேவையை பொறுத்தது. அதே சமயம் சில நேரங்களில் வங்கிகள் பண்டிகைகால ஆஃபராக, ஹியர் எண்ட் ஆஃபரக சில சமயங்களில் பர்சன் லோனில் சில சிறப்பான சலுகைகள், தள்ளுபடிகளை அறிவிக்கும். அப்போது கிடைக்கும் வாய்ப்பை கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  அந்த வகையில் பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் ஒரு சூப்பரான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதுக் குறித்து பார்க்கலாம். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திடீர் அறிவிப்பு கட்டாயம் மகிழ்ச்சியை தரும். அதாவது வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 லட்சம் வரை உடனடி கடன் வழங்கும் திட்டத்தை வங்கி அறிவித்துள்ளது.

  இதையும் படிங்க.. PNB : வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் இத்தனை அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி !

  அதாவது, எல்லோருக்கும் இல்லை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அரசு அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள் இந்த instand loan மூலம் ரூ. 8 லட்சம் வரை கடன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு வாடிக்கையாளர்கள் ஆதார் நம்பர் மற்றும் மொபைல் நம்பரைப் பதிவிட்டாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தகுதி மதிப்பீட்டுக்கு பிறகு ஒரு சில நிமிடங்களில் இந்த லோன் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க.. வீட்டில் பெண் குழந்தை இருக்கா? அப்ப இந்த திட்டங்கள் குறித்து கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

  அதே போல் இந்த உடனடி கடன் திட்டத்துக்கு வாடிக்கையாளர்களிடம் செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் இந்த http://instaloans.pnbindia.in/ லிங்கினுள் சென்று விவரங்களை பார்க்கலாம். அதே போல் இந்த உடனடி கடனுக்கும் விண்ணப்பிக்கலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Loan, Pnb