பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது. கட்டண உயர்வு, மினிமல் பேலன்ஸ் என வங்கியின் புதிய அறிவிப்புகள் அனைத்தும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. என்னென்ன அறிவிப்புகள் அது.. விரிவாக பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு, சேலரி கணக்கு, கரண்ட் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவரும் இந்த தகவலை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வங்கிச் சேவைகளுக்கான கட்டணத்தை வங்கி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காததற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸை முறையாக இல்லாமல் இருந்தால் அதற்கான கட்டணம் கிராமப்புற பகுதிகளுக்கு ஒரு காலாண்டுக்கு 200 ரூபாயில் இருந்து ரூ. 400 உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களை பொறுத்தவரை கட்டணம் ஒரு காலாண்டுக்கு 300 ரூபாயில் இருந்து ரூ 600 உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. Fixed Deposit: பணத்தை போடுவதற்கு முன்பு இதை செய்ய மறவாதீர்கள்!
மெட்ரோ நகரங்களில் வங்கிக் கணக்கின் காலாண்டு சராசரி மினிமம் பேலன்ஸ் தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுவும் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியாக மாறியுள்ளது. அதே போல் பணப்பரிவர்த்தனையை பொறுத்த வரையில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 3 இலவச பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதன்பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஆறுதல் தகவல் என்னவென்றால் இது மட்டும் மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு இலவச டெபாசிட் வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டு 14 நாட்களுக்கு பின் மூடப்பட்டால் அதற்கான அபராதம் 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 12 மாதத்துக்கு பின்பு மூடப்படும் நடப்பு கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கப்படாது.
இதேபோல் லாக்கருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் லாக்கர் கட்டணம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.இந்த எல்லா கட்டண உயர்வும் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Savings