எஸ்பிஐ வங்கி ஏற்கெனவே செயல்பாட்டில் வைத்திருக்கும் பணம் செலுத்துவது தொடர்பான விதிகளை பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஏப்ரல் 4ஆம் தேதி கட்டாயமாக்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாசிட்டிவ் பேமண்ட் முறை (PPS), அதாவது காசோலை மூலமாகப் பணம் செலுத்துவது சரிபார்ப்புக்கு பின்பு தான் ஆக்டிவேட் செய்யப்ப்படும். மோசடியைத் தடுக்க இந்த திட்டத்தை வங்கிகள் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் எஸ்பிஐ மற்றும் பாங்க் ஆஃப் பரோடா இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தன. அவர்களை தொடர்ந்து தற்போது
பஞ்சாப் நேஷனல் வங்கியும் ஏப்ரல் 4ஆம் தேதி முதம் இதை கட்டாயமாக்கியுள்ளது. கணக்கு வைத்திருப்பவர் காசோலை வழங்கப்படும் போது வங்கியில் முழுமையான விவரங்களை வழங்க வேண்டும். காசோலை வழங்குபவர், காசோலையின் விவரங்களை வங்கிக்கு SMS, மொபைல் ஆப், நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் மூலம் தெரிவிக்கலாம்.
FIXED DEPOSIT : எஸ்பிஐ மற்றும் போஸ்ட் ஆபீஸில் கிடைக்கும் சலுகைகள் இதுதான்!
இந்த விதிமுறை ரிசர்வ் வங்கியுடன் தொடர்புடையது. எனவே, பஞ்சாப் வங்கி வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டிய தகவல் இதுதான். வாடிக்கையாளரின் உறுதிப்படுத்துதல் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியாது ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலையை வழங்கினால் வாடிக்கையாளரின் உறுதிப்படுத்தல் அவசியம் .
state bankல் இப்படியொரு சூப்பரான சேமிப்பு திட்டமா? இத்தனை நாள் தெரியாம போச்சே!
கணக்கு எண், காசோலை எண், காசோலை தேதி, காசோலைத் தொகை மற்றும் பயனாளியின் பெயர் ஆகிய விவரங்களை வாடிக்கையாளர்கள் வழங்கிய பின்பு தகவல்கள் சரிபார்க்கப்பட்டு ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால், காசோலை நிராகரிக்கப்படும்.அதே சமையம் இந்த தகவலை வாடிக்கையாளர்கள் வழங்கவில்லை என்றாலும் காசோலை திரும்பப் பெறப்படும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.