பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தால் கட்டாயம் இந்த தகவலை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். அதாவது வரும் ஏப்ரல் 4 முதல் வங்கி நிர்வாகம் பாசிட்டிவ் பே சிஸ்டம் (Positive Pay System) என்ற அப்டேட்டை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதை வாடிக்கையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட பாசிட்டிவ் பே சிஸ்டம் முறையை சமீப காலமாக அனைத்து வங்கிகளும் நடைமுறைக்கு கொண்டு வரும் நிலையில் தற்போது
பஞ்சாப் நேஷனல் வங்கியும் இதை செயல்படுத்தவுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயத்தை பற்றி இப்போது பார்க்கலாம். புதிய விதிமுறைகளின் படி, 10 லட்சம் ரூபாய் அல்லது 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள காசோலைகளை ஆக்டிவ் செய்ய வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களிடம் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. Savings Account : போஸ்ட் ஆபீஸ் பேங்கில் தொடங்க திட்டமா..! இந்த செய்தி உங்களுக்கு தான்
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை செயல்படுத்த வேண்டும் என்றால் வாடிக்கையாளர்கள் காசோலை விவரங்கள், காசோலை எண், அது யாருக்கு கொடுக்கப்பட்டது, எவ்வளவு தொகை, மற்றும் காசோலை தேதி போன்ற முக்கிய விவரங்களை ஆன்லைனில் அல்லது நேரிடையாக, மொபைல் மூலமாகவும் வங்கிகளுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அப்படி கூறினால் மட்டுமே அந்த
காசோலை பரிவர்த்தனை அடுத்த கட்டத்திற்கு நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதை குறிப்பிட மறந்தாலும் வங்கி நிர்வாகம் அவர்களை தொடர்பு செய்து இந்த தகவல்களை முறையாக பெற்ற பின்னரே காசோலை பரிவர்த்தனையை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. FIXED DEPOSIT: வட்டி அதிகமாக தர போட்டி போடும் எஸ்பிஐ vs போஸ்ட் ஆபீஸ்.. உங்கள் தேர்வு எது?
இந்நிலையில் இந்த புதிய மாற்றம் பஞ்சாப் வங்கியில் வரும் ஏப்ரல் 4 முதல் அமலுக்கு வருகிறது. காசோலை மோசடிகளை தவிர்க்கவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவை படிப்படியாக அனைத்து வங்கிகளும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் இணைந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.