Home /News /business /

PMSBY: ஆண்டுக்கு ரூ.12 போதும்... அரசு வழங்கும் ரூ.2 லட்சத்தை எப்படி பெறலாம் தெரியுமா?

PMSBY: ஆண்டுக்கு ரூ.12 போதும்... அரசு வழங்கும் ரூ.2 லட்சத்தை எப்படி பெறலாம் தெரியுமா?

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா

PMSBY online: ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். தலா ஒரு திட்டத்திற்கு ரூ. 2 லட்சம், இரண்டு திட்டத்திலும் சேர்ந்தவர்கள் 4 லட்சம் பெற முடியும்.

  • RedWomb
  • 2 minute read
  • Last Updated :
    பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என அழைக்கப்படும் பிரதமரின் பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தில் எப்படி ரூ. 2 லட்சம் பெற முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

    இது ஒரு காப்பீட்டு திட்டமாகும். மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த PMSBY திட்டத்தில் இணைந்த 1 வருடத்திற்குள் விபத்தில் சிக்கி இறக்க நேரிட்டால் இத்திட்டத்தின் கீழ் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இது ஒரு அரசு விபத்து காப்பீடு ஆகும். இந்த திட்டத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க முடியும். 2 வகையான காப்பீடு திட்டங்கள் உள்ளது. விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடும். ஒருவர் 2 காப்பீடுகளையும் எடுக்க முடியும். இது ஒரு குழுகாப்பீடு என்பதால் பாலிசி சான்றிதழ் கிடைக்காது. ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். தலா ஒரு திட்டத்திற்கு ரூ. 2 லட்சம், இரண்டு திட்டத்திலும் சேர்ந்தவர்கள் 4 லட்சம் பெற முடியும்.

    வங்கியில் சேவிங் அக்கவுண்ட் கொண்ட 18-70 வயதுடையவர்கள் இந்த பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். விபத்து காரணமாக ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகள் இத்திட்டத்தில் கவர் ஆகும் அதே நேரத்தில் ஒருவேளை விண்ணப்பதாரர் தற்கொலை செய்து கொண்டால், இந்த திட்டத்தால் அவரது குடும்பத்திற்கு எந்த பண பயனும் கிடைக்காது.

    PMSBY திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் பாலிசியை பெறுபவர்கள் ஆண்டுக்கு வெறும் ரூ.12 ரூபாய் செலுத்தினால் போதுமானது. ஒரு முறை இந்த திட்டத்தில் சேர்ந்து விட்டால், ஆண்டுதோறும் பாலிஸிதரரின் வாங்கி கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் மூலம் பிரீமியம் தொகை (ரூ.12) எடுத்து கொள்ளப்படும். ஆயுள் காப்பீட்டில் 18 வயது முதல் 50 வயதுவரை ஆண் பெண் இருபாலாரும் சேரலாம். ஆயுள் காப்பீட்டை 55 வயது வரை தொடரலாம். இத்திட்டத்தில் முதிர்வு தொகை என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது.ஆயுள் காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 330 ரூபாயும் ஒருவரிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும்.

    இந்த திட்டத்திற்கான படிவத்தை நிரப்பி சேர்ந்து்விட்டால் ஒவ்வொரு ஆண்டும் அவரது கணக்கிலிருந்து காப்பீட்டு கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும். படிவத்தில் நாமினி பெயரை குறிப்பிட வேண்டும்.PMSB பாலிஸி எடுத்துள்ள நபரின் வங்கி கணக்கு க்ளோஸ் செய்யப்பட்டால் இந்த விபத்து காப்பீட்டை நடைமுறையில் வைத்திருக்க போதுமான பேலன்ஸ் குறிப்பிட்ட வங்கி அக்கவுன்ட்டில் இல்லை என்றால் PMSBY பாலிஸியானது டெர்மினேட் அல்லது ரிஸ்ட்ரிக்டட் செய்யப்படும்.

    பிரதமரின் இந்த பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்திற்கு அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நீங்கள் உரிய படிவத்தை டவுன்லோட் செய்து நீங்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கியை அணுகி சேரலாம். அனைத்துப் பெரிய வங்கி நிறுவனங்களின் வங்கி கிளைகளிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. வங்கி கணக்கு மூலம் மட்டுமே இந்த திட்டத்தை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: National Insurance

    அடுத்த செய்தி