பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 11வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் கணக்கில் வந்துள்ளன.இந்நிலையில் 11வது தவணை குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணை வெளியிடப்பட்டுள்ளது. 11வது தவணை குறித்த அப்டேட்டுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
SBI update : இந்த தேதிகளில் வங்கிச் சேவை பாதிக்கப்படலாம்.. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க!
வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் தவணை பேங்க் அக்கவுண்டுக்கு வந்துவிடும். ஆனால் தற்போது வரை 11வது தவணை வந்து சேரவில்லை. இதனை எதிர்நோக்கி விவசாயிகள் உள்ளனர். ஒவ்வொரு முறையும் போலவே, பிரதமர் மீண்டும் வழக்கம் போல் தனது முடிவுகளால் மக்களை ஆச்சரியப்படுத்தலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. இருப்பினும், 11வது தவணையை வெளியிடுவது தொடர்பான தேதி உறுதியாக தெரியவில்லை
EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!
இந்நிலையில், தற்போது பிஎம் கிசான் திட்டத்தின் 11வது தவணை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, ராம நவமி அல்லது அம்பேத்கர் பிறந்த நாளன்று விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த தொகையானது ஏப்ரல் 10ஆம் தேதி அல்லது ஏப்ரல் 14ஆம் தேதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லை, பிஎம் கிசான் திட்டத்தின் ஸ்டேட்டஸ் விவரத்தை ஆன்லைனிலும் பார்க்கலாம். https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற லிங்கிற்கு சென்று, உங்களுக்கு தேவையான திரை வந்தவுடன் அதில், ஆதார் எண், PM கிசான் கணக்கு எண் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, தரவினை பெற விருப்பத்தை கிளிக் செய்யவும். அதன் பிறகு நீங்கள் உங்கள் நிலையைப் பார்க்க முடியும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.