மோடி, அருண் ஜெட்லி இருவருக்கும் பொருளாதாரம் என்னவென்றே தெரியாது - சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி.

உண்மையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. எனினும், பிரதமர் மோடி தொடர்ந்து 6 வது இடத்தில் உள்ளோம் என்று கூறிவருகிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்றவருமான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் கூறியுள்ளார்.

  மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடந்த  ‘ஆனுவல் கொல்கத்தா டயலாக் 2019’ நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருக்கும் பொருளாதாரம் குறித்து ஒன்றும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர்.

  ஆனால், உண்மையில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. எனினும், பிரதமர் மோடி தொடர்ந்து 6 வது இடத்தில் உள்ளோம் என்று கூறிவருகிறார்.

  ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாங்கும் சக்தியை பொருத்தத்து தான் கணக்கிட வேண்டும். அந்நிய செலாவணி வைத்துக் கணக்கிடக் கூடாது. அந்நிய செலாவணி இருப்பு நிலைத்தன்மையற்றது.

  அதன் அடிப்படையில் கணக்கிட்டாலும் இந்தியாவின் பொருளாதாரம் 7வது இடத்தில் தான் இருக்கிறது. காலணி ஆதிக்கத்திற்குப் பிறகு அமெரிக்கா, சீனாவை அடுத்துச் செழிப்பான நாடாகவும் இந்தியா உள்ளது என கடிதம் எழுதியுள்ளேன்.

  1950-ம் ஆண்டு ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியாவிற்கு வழங்கிய நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வேண்டாம் என்று நிராகரித்து சீனாவிற்கு அதை கற்றுக்கொடுத்ததற்குக் காரணம் ஜவஹர்லால் நேரு தான் காரணம்.

  அது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் விவகாரங்களுக்குப் பிறகு தான் வெளிவந்துள்ளது. மசூத் அசார் தலைமையிலான பயங்கரவாதிகள் அமைப்பு 2019 பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடந்த 40 இந்திய ராணுவ வீரர்கள் படுகொலைக்குக் காரணம் என ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: