• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சர்வதேச நிறுவனங்களுக்கான முதலீடுகளுக்கு இந்தியா சரியான இடம்: பிரதமர் மோடி

சர்வதேச நிறுவனங்களுக்கான முதலீடுகளுக்கு இந்தியா சரியான இடம்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Virtual Global Investor Roundtable (VGIR) 2020 | சுயசார்பு இந்தியா என்பது வெறும் கனவு மட்டுமல்ல, திட்டமிட்ட பொருளாதார வியூகமும் கூட என்று பிரதமர் தெரிவித்தார்.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மெய்நிகர் உலக முதலீட்டாளர் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சகமும் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியகமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தின. அப்போது பேசிய பிரதமர், முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

    வைரசை எதிர்த்து போரிடுவதாகட்டும், பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் ஆகட்டும் சிறப்பான உறுதியை இந்தியா வெளிப்படுத்தியதாகவும், நமது அமைப்புகளின் வலிமை, நமது மக்களின் ஆதரவு மற்றும் நமது கொள்கைகளின் நிலைத்தன்மை ஆகியவை இந்த உறுதியின் உந்து சக்தியாக உள்ளதாகவும் பிரதமர்
    மோடி தெரிவித்துள்ளார்.

    வலிமையான மற்றும் துடிப்பான இந்தியா உலக பொருளாதார வரிசையை நிலைப்படுத்துவதற்கு பங்காற்றும் என்றும், உலகப் பொருளாதார எழுச்சியின் உந்துசக்தியாக இந்தியாவை ஆக்குவதற்கு என்ன தேவையோ அதை செய்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

    முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை நம்பிக்கையுடன் திரும்ப எடுக்க சரியான இடம் இந்தியாதான் என்றும்,
    நீடித்து நிற்கும் தன்மையுடன் கூடிய நிலைத்தன்மை கொண்டது இந்தியா என்றும் பிரதமர் கூறினார்.

    மேலும், வேளாண்துறையில் சமீபத்திய சீர்திருத்தங்கள் இந்தியாவின் விவசாயிகளுடன் கைகோர்க்கக்கூடிய புதிய மற்றும் உற்சாகமான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ள பிரதமர், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதப்படுத்துதல் தீர்வுகளின் உதவியோடு, வேளாண் ஏற்றுமதியின் மையமாக விரைவில் இந்தியா உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் ஒரே சந்தையில் பல சந்தைகள் கிடைக்கும் வகையில் பன்முகத் தன்மை உள்ளதாகவும், சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை ஆகியவற்றின் மீது சம அளவில் கவனம் செலுத்தி வளர்ச்சிக்கான பாதையை பின்பற்றுவதை இந்தியா நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

    சுற்றுச்சூழல், சமூகம், ஆளுகை ஆகியவற்றில் உயர்ந்து நிற்கும் நிறுவனங்களை நோக்கி முதலீட்டாளர்கள் இன்றைக்கு செல்லும் நிலையில், இவற்றில் அதிக கவனம் செலுத்தும் அமைப்புகள், நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

    ஆத்மநிர்பார் பாரத் ( சுயசார்பு இந்தியா ) என்பது வெறும் கனவு மட்டுமல்ல, திட்டமிட்ட பொருளாதார வியூகமும் கூட என்று கூறிய பிரதமர், இதன்படி நமது வர்த்தகங்களின் திறமையையும் தொழிலாளர்களின் திறனையும் பயன்படுத்தி சர்வதேச உற்பத்தி சக்தியாக இந்தியாவை வளர்க்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

    இந்த வட்டமேசை கூட்டத்தில் சர்வதேச றிவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தின் ரத்தன் டாடா உள்ளிட்ட இந்திய தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: