விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி - திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.

விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி - திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அப்போது, வேளாண்மை உள்கட்டமைப்புக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, வேளாண் உள்கட்டமைப்புக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள், செயலாக்க அலகுகள் போன்ற சமூக விவசாய சொத்துகளை உருவாக்குவதற்கு இந்த நிதி ஊக்கமளிக்கும். இந்த அமைப்புகள் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக மதிப்பைப் பெற உதவும்.

இந்தத் திட்டம் தொடர்பாக 12-ல் 11 பொதுத்துறை வங்கிகள், விவசாயத் துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய், வரும் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 10,000 கோடி ரூபாயும், அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.  இந்தநிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading