Home /News /business /

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்.. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்.. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

  • 1 minute read
  • Last Updated :
350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா அடைவதற்கு முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் 42 கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். வால்மார்ட், மாஸ்டர் கார்ட், அமெரிக்கன் டவர் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், 2025க்குள் 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அந்த இலக்கை அடைய அமெரிக்க பெரு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்றும், முதலீட்டிற்காக இந்தியா காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ப்ளூம்பெர்க் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மோடி, இந்தியாவில் முதலீடு செய்வதில் பிரச்னை இருந்தால் பாலமாக செயல்படுவேன் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தார்.

இந்திய மக்களாட்சியும், நீதித்துறையும் ஆங்கிலம் மூலம் வர்த்தகம் செய்ய வசதியாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து நியூயார்க்கின் முன்னாள் மேயர் மிசெல் ப்ளூம்பெர்க்கின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா எட்டுவது கடினமானதல்ல என மோடி உறுதி அளித்தார். பின்பு பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிசெல்லையும் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

First published:

Tags: Modi in US, PM Modi, US

அடுத்த செய்தி