ஹோம் /நியூஸ் /வணிகம் /

pm kisan yojana : உங்கள் அக்கவுண்டுக்கு ரூ.2000 வருவதில் பிரச்சனையா? உடனே இதை செய்யுங்கள்!

pm kisan yojana : உங்கள் அக்கவுண்டுக்கு ரூ.2000 வருவதில் பிரச்சனையா? உடனே இதை செய்யுங்கள்!

பி.எம் கிசான் யோஜனா

பி.எம் கிசான் யோஜனா

pm kisan yojana Pradhan Mantri : www.pmkisanஎன்ற தளத்துக்கு சென்று ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். PM Kisan App வழியாகவும் உங்கள் விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விவசாயிகள் நலன் பெற பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், ஆண்டுக்கு ரூ.6,000 அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்கள் இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும். நாடு முழுவதும் இருக்கும் நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பிரதமர் கிசான் திட்டத்தை அறிமுகம் செய்து அதை வெற்றிக்கரமாக செயல்படுத்தி வருகிறது. இன்றைய தினம், மே 31 ஆம் தேதி பி.எம் கிசான் திட்டத்தின் 11வது தவணை தொகை பிரதமர் மோடியால் வெளியிடப்படும் என விவசாயிகள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  இதையும் படிங்க.. state bank alert : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த மெசேஜ் வந்தா உடனே டெலிட் பண்ணிடுங்க!

  பி.எம். கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் முதலில் கிசான் திட்டத்தில் இணைய வேண்டும். இதுவரை இந்த திட்டத்தில் 10 தவணைகள் விவசாயிகள் கணக்கில் வந்து சேர்ந்துள்ளன. 11வது தவணை இன்று என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நில ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட மற்ற ஆவணங்களையும் எடுத்துச் சென்று உள்ளூரில் இருக்கும் வேளாண்மை அலுவலகத்தில், கிசான் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.அதே போல் ஆன்லைனிலும் விண்ணப்பிக்க முடியும்.

  இதையும் படிங்க.. பென்சன் வாங்குபவர்கள் மே.25க்குள் இதை அப்டேட் செய்ய வேண்டும்.. மத்திய அரசு அறிவிப்பு!

  www.pmkisanஎன்ற தளத்துக்கு சென்று ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். PM Kisan App வழியாகவும் உங்கள் விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.அதே போல் பிஎம் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். இதை எல்லாம் தாண்டி உங்களுக்கு இந்த திட்டம் குறித்து சந்தேகங்கள் புகார்கள் இருந்தால் அதை சரிசெய்யவும் வழி செய்யப்பட்டுள்ளது. அதே போல் வங்கி கணக்கில் ரூ. 2000 வந்து சேர்வதில் சிக்கல் இருந்தாலும் அதையும் நீங்கள் புகாராக தெரிவிக்க அல்லது உரிய விளக்கத்தை பெற பிரதம மந்திரி கிசான் கட்டணமில்லா தொலைபேசி எண் 18001155266 தொடர்பு கொள்ளவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

  பிரதான் மந்திரி கிசான் ஹெல்ப்லைன் எண்கள் 155261, 011-24300606, 0120-6025109 011—23381092, 23382401

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Govt Scheme, PM Kisan