Home /News /business /

PM KISAN :விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அந்த விஷயத்தை செய்ய மே மாதம் வரை காலக்கெடு!

PM KISAN :விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அந்த விஷயத்தை செய்ய மே மாதம் வரை காலக்கெடு!

பிம் எம் கிசான்

பிம் எம் கிசான்

PM KISAN update: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணை ஏப்ரல் 2022 இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிஎம் கிசான் திட்ட விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, நிதியுதவியை பெற கட்டாய eKYC செயல்முறை முடிப்பதற்கான காலகெடு மே 22, 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். ஆதார் அடிப்படையிலான ஒடிபி முறைக்கு உழவர் இ-கேஒய்சி விருப்பத்தைக் கிளிக் செய்ய இதனை அப்டேட் செய்யலாம்.பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் தவணைத் தொகையை பெற eKYC அப்டேட்டை செய்யாவிட்டால் அடுத்த தவணை தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது.eKYC செயல்முறைக்கு மார்ச் 31 2022 ஆம் தேதி இறுதி காலக்கெடுவாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மகிழ்ச்சியான செய்தியாக இந்த eKYC செயல்முறை முடிப்பதற்கான காலகெடு மே 22, 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) ஆனது, விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும் . இந்த திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகை மூன்று சம தவணைகளாக, அதாவது தவணைக்கு ரூ.2000 என வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணை ஏப்ரல் 2022 இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உதவி தொகை எந்த பிரச்சனையும் இன்றி கிடைக்க, ஒவ்வொரு PM-KISAN பயனாளிகளும் PM கிசான் இணையதளத்தில் eKYC செயல்முறையை அப்டேட் செய்து இருக்க வேண்டும். இதுவரை செய்யாதவர்கள் வரும் மே மாதத்திற்குள் இதை கட்டாயம் செய்து விடுங்கள். eKYC செயல்முறையை எவ்வாறு அப்டேட் செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.

    1. PM கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். லிங்க் இங்கே – https://pmkisan.gov.in/

    2. பின்பு முகப்புப் பக்கத்தின் வலது பக்கத்தில், eKYC விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

    3. அடுத்தது உங்கள் ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.

    4. இப்போது உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.

    5. இறுதியாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.

    மேற்கண்ட எல்லா விவரங்களும் பொருந்திய பின்பு eKYC வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதற்கான செய்தியை பெறுவீர்கள்.
    இதை தவிர்த்தி KYC சரிபார்ப்பைப் பெறுவதற்கு அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று அவர்களின் ஆதார் அட்டையைக் காண்பித்து இந்த அப்டேட்டை முடிக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Farmers, PM Kisan

    அடுத்த செய்தி