Home /News /business /

PM KISAN update : மத்திய அரசின் ரூ. 2000 தொகை கிடைக்க கட்டாயம் இதை செய்திடுங்கள்!

PM KISAN update : மத்திய அரசின் ரூ. 2000 தொகை கிடைக்க கட்டாயம் இதை செய்திடுங்கள்!

பிஎம் கிசான்

பிஎம் கிசான்

PM KISAN : பணம் கிடைக்க வேண்டும் என்றால் வெகு விரைவில் இ-கேஒய்சி செய்து கொள்வது நல்லது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 11ஆவது தவணைத் தொகையாக ரூ.2,000 விரைவில் கிடைக்க இருக்கிறது. நாடெங்கிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் இந்தப் பணத்தை பெறுவதற்கு காத்திருக்கும் நிலையில், வேளாண் நிதியுதவித் திட்டத்தில் E-KYC செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தகுதிவாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில், இன்னும் ஓரிரு வாரங்களில் பணம் வரவு வைக்கப்பட உள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் வேளாண் நிதியுதவித் திட்ட இணையதளத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில், “வேளாண் நிதியுதவித் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் E-KYC செய்வதற்கான காலக்கெடு மே மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் காலக்கெடு மே 22ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக இருந்தது.

    இந்த வருடம் படிப்புக்காக லோன் வாங்க போறீங்களா? இந்த தவறையெல்லாம் செய்யாதீர்கள்!

    கடந்த ஆண்டில், இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மே 15ஆம் தேதியன்று பணம் வரவு வைக்கப்பட்டது. இந்த ஆண்டில், இன்னும் சில வாரங்களில் ரூ.2,000 வரவு வைக்கப்படும் என்றாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது கொடுக்கப்பட இருப்பது 11ஆவது தவணைத் தொகை ஆகும்.

    11ஆவது தவணையைப் பெற இ-கேஒய்சி அவசியமா?

    பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு E-KYC கட்டாயம் என்றும், அருகாமையில் உள்ள சிஎஸ்சி சேவை மையங்களை தொடர்பு கொண்டு பயோமெட்ரிக் பதிவை செய்து கொள்ளுமாறு பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்களுக்காக அரசு வழங்கும் கடனுதவிகள்.. எப்படி பெறுவது? முழு விபரம்!

    இந்த நடைமுறை கட்டாயம் என்று அரசு அறிவித்திருப்பதால், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு தடையின்றி பணம் கிடைக்க வேண்டும் என்றால் வெகு விரைவில் E-KYC செய்து கொள்வது நல்லது. எனினும், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தவணைத் தொகை அதற்கு முன்பாக வரவு வைக்கப்பட்டுவிட்டால், E-KYC கட்டாயமில்லை என்றாகிவிடும். அதே சமயம், அதற்கு பிறகு பணம் வரவு வைக்கப்படும்போது அது கட்டாயம் ஆகும்.

    இ-கேஒய்சி (E-KYC) எப்படி செய்வது?

    ஆதார் கார்டு அடிப்படையில் ஓடிபி பெற்று இ-கேஒய்சி அப்டேட் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்போதைய சூழலில், ஆதார் கார்டு பயன்படுத்தி ஓடிபி மூலமாக நீங்கள் இதை அப்டேட் செய்ய முடியாது.

    நமது பயோமெட்ரிக் விவரங்களை உறுதி செய்வதன் மூலமாகத்தான் இ-கேஒய்சி அப்டேட் செய்ய முடியும். ஆகவே, விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சிஎஸ்சி மையங்களுக்குச் சென்று, பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பித்து இதை செய்து கொள்ள வேண்டும்.

    பயனாளிகள் தவறான தகவல்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், வரவு வைக்கப்பட்ட பணத்திற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்திவிட வேண்டும். இதற்கு முன்பாக பிரதமரின் வேளாண் நிதியுதவித் திட்ட இணையதளத்தில் இந்த விவரங்களை அப்டேட் செய்யும் வசதி இருந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, PM Kisan

    அடுத்த செய்தி