முகப்பு /செய்தி /வணிகம் / PM KISAN: அரசு வழங்கும் பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு! 

PM KISAN: அரசு வழங்கும் பிஎம் கிசான் நிதியுதவி திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு! 

பி.எம் கிசான்

பி.எம் கிசான்

PM KISAN update: பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

  • Last Updated :

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகள் அத்திட்டம் பற்றிய அப்டேட்களை செல்போன் மூலமாக அறிந்து கொள்ளும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இணையும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்த தொகையானது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பலனடையும் விதமாக 11வது தவணையாக ரூ.21,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 31 அன்று வெளியிட்டார். ஒரு நிதியாண்டில், PM கிசான் தவணை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 3 முறை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஏப்ரல்-ஜூலை வரை முதல் தவணையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலம் இரண்டாவது தவணை மற்றும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலானது 3வது தவணைக்கான காலமாக கணக்கிடப்படுகிறது.

திருமணம் ஆனவர்கள் வருடத்திற்கு ரூ.72,000 பென்சன் பெற முடியும் தெரியுமா?

இதுவரை விவசாயிகள் அடுத்த தவணை குறித்த அறிவிப்பு போன்ற திட்டம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுவது மட்டுமே தீர்வாக இருந்த நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவசாயிகள் தங்களது விண்ணப்ப நிலை, வங்கி கணக்கில் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ள போன்ற தகவல்களை பிரதமர் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ( pmkisan.gov.in ) சென்று, தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போனை உள்ளிடுவதன் மூலமாக சரிபார்க்கும் நடைமுறையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதற்கு பதிலாக விவசாயிகள் கிசான் போர்ட்டலில் தங்களது ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு மூலமாக திட்டத்தை சரி பார்க்கும் முறை செயல்படுத்தப்பட்டு வந்தது.

சுகர் பிரச்சனை இருப்பவர்களுக்கும் இனி மருத்துவ காப்பீடு.. செலவு குறைய போகுது!

விவசாயிகள் இப்போது தங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்து தகவல்களை சரி பார்க்கும் வசதி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

PM கிசான் பயனாளிகள் ஆன்லைனில் பதிவு/மொபைல் எண் மூலம் சரிபார்ப்பது எப்படி?

படி 1: pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

படி 2: பயனாளி நிலையை அறிந்து கொள்ள Beneficiary Status என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய பக்கம் தோன்றும்.

படி 3: உள்ளீடு விவரங்களை வழங்க பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்

படி 4: பாதுகாப்பு காரணங்களுக்காக image text or captch ஏது தோன்றுகிறதோ அதனை பட குறியீட்டு பெட்டியில் பதிவிடவும்.

படி 5: இப்போது பயனாளியின் நிலையைச் சரிபார்க்க ‘தரவைப் பெறு’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Govt Scheme, PM Kisan