நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றுள் மிகமுக்கியமான திட்டமாக இருப்பது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களும் ஒரு நிதியாண்டில் ரூ.6000 நிதியானது மூன்று சம தவணைகளில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என்று பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019 பிப்ரவரியில் PM-KISAN திட்டம் துவக்கப்பட்ட போது சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. அதிலிருந்து தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில், ஒரு நிதி ஆண்டில் 3 முறை அவர்களின் பேங்க் அக்கவுண்டில் PM KISAN தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 11 தவணை நிதி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு உள்ளது.
ஹோம் லோனில் வீடு வாங்க நினைப்பவர்கள் இதையெல்லாம் கட்டாயம் நோட் பண்ணுங்க!
இந்த திட்டத்தின் கீழ் 10-வது தவணை நிதி ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், அடுத்து 11-ஆம் தவணை நிதிக்காக விவசாயிகள் ஆவலாக காத்திருந்தார்கள். இதனை தொடர்ந்து கடந்த மே 31, 2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி, PM-Kisan திட்டத்தின் 11-வது தவணையாக 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியை வழங்கினார்.
PM கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணை நிதி எப்போது வெளியிடப்படும்.?
PM கிசான் திட்டத்தின் 12-வது தவணை நிதியானது வரும் செப்டம்பர் 1, 2022-க்குப் பிறகு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாக ஒரு நிதியாண்டில் முதல் தவணை ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் இருக்கும். மத்திய அரசு ஏற்கனவே eKYC காலக்கெடுவை மே 31-லிருந்து ஜூலை 31 வரை நீடித்தது.
LIC தரும் அசத்தலான வாய்ப்பு.. ரூ. 55 லட்சத்தை சொந்தமாக்க தினமும் ரூ. 253 சேமியுங்கள்!
PM கிசான் வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டுள்ள விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது. அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்காக அருகிலுள்ள CSC மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். PM கிசான் திட்டத்தில் நன்மைகளை பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் eKYC-ஐ முடிப்பதற்கான காலக்கெடு 31 ஜூலை 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை இல்லாமல் திட்டத்தால் பயன் பெறுவோரின் Beneficiary status-ஐ எவ்வாறு சரி பார்க்கலாம்.?
* PM கிசான் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று ஹோம்பேஜின் வலது பக்கத்தில் இருக்கும் Farmers Corner ஆப்ஷனை பார்க்கவும்.
* அதிலிருக்கும் Beneficiary Status லிங்கை கிளிக் செய்யவும்
* புதிய பேஜை ஓபன் செய்ய Registration Number அல்லது Mobile Number ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
* கேப்ட்சா கோட் என்டர் செய்து generate OTP-ஐ கிளிக் செய்யவும்
ஒருவேளை eKYC முடிக்கப்படவில்லை எனில், ஸ்டேட்டஸை சரிபார்க்கும் முன்,eKYC-ஐப் புதுப்பிக்குமாறு கேட்கப்படலாம்.
பிஎம் கிசான் யூஸர்கள் தங்களது eKYC-ஐ ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்யலாம்.?
* அதிகாரபூர்வ வெப்சைட்டான https://pmkisan.gov.in/NewHome3.aspx-க்கு செல்ல வேண்டும்
* ஹோம் பேஜின் வலது பக்கத்தில் உள்ள eKYC என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பின் ஆதார் நம்பர் & கேப்ட்சா கோட் ஆகியவற்றை என்டர் செய்து search-ஐ கிளிக் செய்ய வேண்டும்
* தொடர்ந்து ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்ய வேண்டும்
* மொபைல் நம்பரை என்டர் செய்த பிறகு, 'Get OTP' என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் குறிப்பிட்ட பாக்ஸில் மொபைல் நம்பருக்கு வந்துள்ள OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, PM Kisan