Home /News /business /

PM kisan status : ரூ.2,000 தரும் மத்திய அரசு.. பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

PM kisan status : ரூ.2,000 தரும் மத்திய அரசு.. பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

பி.எம் கிசான்

பி.எம் கிசான்

PM Kisan : 11ஆவது தவணைத் தொகையை அடுத்த சில நாட்களில் மத்திய அரசு விநியோகம் செய்ய உள்ளது

    பிரமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் பலன் அடைந்து வரும் விவசாயிகளுக்கு 11ஆவது தவணைத் தொகையை அடுத்த சில நாட்களில் மத்திய அரசு விநியோகம் செய்ய உள்ளது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், “நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் அளிப்பதாக பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டம் அமைந்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து டிவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “விவசாயிகளாக உள்ள நமது சகோதர, சகோதரிகளை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. விவசாயிகள் மேம்படுத்தப்பட்டால் புதிய இந்தியா இன்னும் வளம் மிகுந்ததாக மாறும். பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டம் மற்றும் வேளாண் துறை சார்ந்த இதர அரசு நலத் திட்டங்கள் ஆகியவை, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பலம் கொடுப்பதாக அமைந்துள்ளன என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

    செம்ம ஹாப்பி நியூஸ்.. பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இனி அந்த வங்கியில் அதிக வட்டி!

    ரூ.2,000 தவணைத் தொகை

    நாட்டில் தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவருக்கும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஓராண்டில் மூன்று தவணைகளாக ரூ.2,000) மொத்தம் ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திட்டம் தொடங்கியதில் இருந்து 11ஆவது தவணைத் தொகை வெகு விரைவில் கிடைக்க இருக்கிறது.

    பயனாளிகள் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி

    * தகுதி வாய்ந்த விவசாயிகள் https://www.pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தாங்களாகவே இந்தத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள இயலும்.
    * இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில், வலது பக்கம் உள்ள ‘பார்மர்ஸ் கார்னர்’ என்ற ஆப்சன் மீது கிளிக் செய்யவும்.
    * இப்போது புதிய விவசாயிகளின் பதிவுக்கான ஆப்சனை தேர்வு செய்யவும்.
    * பின்னர் பதிவுக்கு தேவையான ஸ்கிரீன் அடுத்த பேஜ் ஒன்றில் திறக்கும்.
    அந்த ஸ்கிரீனில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் உள்ளிடுவதோடு, அவை அனைத்தையும் நீங்களே ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.
    * இறுதியாக சப்மிட் பட்டன் மீது கிளிக் செய்யவும். திட்டத்தில் உங்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்கான காலக்கெடு 2022 மே 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைக்க வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்!

    நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு

    பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனாளிகளின் பட்டியலில் அவர்களது பெயர் இணைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இந்தப் பணமானது நேரடி வங்கிப் பரிமாற்றத்தின் மூலம், விவசாயிகளின் சொந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நாடெங்கிலும் சுமார் 12.35 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, Modi, PM Kisan

    அடுத்த செய்தி