விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தின் 11-வது தவணை குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் இதில் இணையும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு வருமானமாக நிதி ஆண்டுக்கு ரூ.6,000 நிதியானது 3 தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர்.
SBI : கல்லூரியில் படிக்க ரூ. 50 லட்சம் வரை லோன் தரும் ஸ்டேட் பேங்க்! அப்ளை செய்யும் முறை
முன்னதாக, பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் 10ஆவது தவணைத் தொகை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி செலுத்தப்பட்டது. தற்போது தங்கள் வங்கிக் கணக்கில் 11ஆவது தவணைத் தொகையைப் பெறுவதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.விவசாயிகளுக்கு உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து ஏற்கனவே வெளியான தகவலின் படி மே 14ஆம் தேதி வங்கி கணக்கில் பணம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், கடந்த ஆண்டு உதவித்தொகையை மத்திய அரசு மே 14ஆம் தேதியன்று வங்கிக் கணக்குகளில் செலுத்தியது. அதன்படி இந்த ஆண்டிலும் மே 14ஆம் தேதி அக்கவுண்டில் பணம் போடப்படும் என விவசாயிகள் பெரிதும் நம்பி இருந்தனர். இந்நிலையில், இன்னும் 11வது தவணை வந்து சேரவில்லை.
state bank alert : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த மெசேஜ் வந்தா உடனே டெலிட் பண்ணிடுங்க!
இந்நிலையில், வரும் மே 31 ஆம் தேதி 11வது தவணை வங்கி கணக்கில் செலுத்தப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நிதி உதவிக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த தகவல் சந்தோஷத்தை தந்துள்ளது. இருப்பினும் இந்த தகவலை இதுவரையிலும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மே 31 ஆம் தேதி ரூ. 2000 கண்டிப்பாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என இணையத்தில் செய்திகளும் வெளியாகியுள்ளன.
பிஎம் கிசான் திட்டத்தில் நிதிப்பலன்களை தொடர்ந்து பெற eKYC செயல்முறையை முடிப்பது கட்டாயமாகும். மத்திய அரசு இந்த அப்டேட்டிற்கு மே 31ஆம் தேதி வரை காலக்கெடுவை அண்மையில் நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.