• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • டிசம்பர் மாதம் விவசாயிகள் ரூ.2000 வாங்கி கொள்ளலாம்.. எங்கு? எப்படி? முழு விவரம்!

டிசம்பர் மாதம் விவசாயிகள் ரூ.2000 வாங்கி கொள்ளலாம்.. எங்கு? எப்படி? முழு விவரம்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

pm kisan: விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி பிரதமர் மோடி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

  • Share this:
    நாட்டில் இருக்கும் நலிவடைந்த விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற விவசாய நிதியுதவித் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு வருடந்தோறும் மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 10-வது தவணைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.நாட்டின் முக்கிய ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவலின்படி, PM KISAN திட்டத்தின் 10-வது தவணை நிதியானது வரும் டிசம்பர் 15 அன்று பயனாளிகளின் (விவசாயிகளின்) பேங்க் அக்கவுண்டில் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் நாடு முழுவதும் விவசாயம் செய்ய கூடிய நிலம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ.6000 வழங்குவதன் மூலம் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை அதிகரிக்க செய்கிறது. நலிவுற்ற விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான நிதி உதவி திட்டத்தை நாட்டிலேயே முதலில் தெலுங்கானா மாநிலம் தான் அமல்படுத்தியது.

    வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் உலக வங்கியின் பாராட்டுக்களை பெற்றது. விவசாயிகளுக்கான வேளாண் கடன் தள்ளுபடியை காட்டிலும், விவசாயிகளின் வருமானத்திற்கு ஆதரவளிக்கும் இந்த திட்டத்தில் நிதி செலவிடுவது நல்ல முடிவு என்று நிபுணர்களும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை மத்திய அரசும் கையில் எடுத்தது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி பிரதமர் மோடி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

    தகுதி வாய்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில், ஒரு நிதி ஆண்டில் மூன்று முறை தகுதியான விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் PM KISAN தவணை நிதி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஒரு நிதி ஆண்டில் ஏப்ரல் - ஜூலை, ஆகஸ்ட் - நவம்பர், டிசம்பர் - மார்ச் என விவசாயிகளின் கணக்கில் நிதி செலுத்தப்பட்டு வருகிறது. இது வரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தான் 10-ஆம் தவணை நிதி வரும் டிசம்பர் 15-ல் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    விவசாயிகள் PM KISAN வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்தி தங்கள் பெயரை சரிபார்க்கலாம். இதனிடையே சிறப்பான மற்றும் தொந்தரவு இல்லாத அணுகலுக்காக ஹாட்லைன் எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதை பயன்படுத்தி விவசாயிகள் இந்த திட்டத்தில் தாங்கள் அனுபவிக்கும் சிக்கல்களை தெரிவிக்கலாம்.

    1 வருட நிலையான வைப்புநிதிகளுக்கு 6.50% வரை வட்டி வழங்கும் தனியார் வங்கிகளின் பட்டியல்!

    இந்த திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தனது கிரெடிட் விவரங்களை https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்னும் அதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்க் மூலம் சரிபார்க்கலாம். இந்த லிங்கில் Beneficiary Status என்பதன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதார் நம்பர், அக்கவுண்ட் நம்பர், மொபைல் நம்பர் ஆகிய மூன்றில் எதாவதொன்றை பயன்படுத்தி பயனாளிகள் தங்கள் கிரெடிட் விவரங்களைச் சரி பார்த்து கொள்ளலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: