Home /News /business /

PM Kisan status: ரூ. 2000 எப்போது கிடைக்கும் என்பதை செக் செய்வது எப்படி?

PM Kisan status: ரூ. 2000 எப்போது கிடைக்கும் என்பதை செக் செய்வது எப்படி?

பி.எம்.கிசான் திட்டம்

பி.எம்.கிசான் திட்டம்

pm kisan : PM கிசான் பயனாளியின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 9 தவணைகள் விவசாயிகளின் கணக்கில் வந்துள்ளன. இருப்பினும் சில விவசாயிகளுக்கு 9வது தவணை கிடைக்காத காரணத்தால், அந்த பணமும் 10-வது தவணையோடு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    மேலும், 10வது தவணையை வெளியிடுவதற்கான ஆணையை அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, டிசம்பர் 15 ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 16 ஆம் தேதி தவணையை வெளியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது.

    இருப்பினும், 10வது தவணையை வெளியிடுவது தொடர்பான தேதியை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களை மதிப்பிடுவதில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் போலவே, பிரதமர் மீண்டும் வழக்கம் போல் தனது முடிவுகளால் மக்களை ஆச்சரியப்படுத்தலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

    டிசம்பர் 16ம் தேதி அதாவது இன்று இயற்கை விவசாய முறைகள் குறித்து குஜராத் அரசு ஏற்பாடு செய்திருந்த விவசாய நிகழ்ச்சியில் ஆன்லைன் வாயிலாக பிரதமர் மக்களிடையே உரையாற்றுகிறார். இத்திட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் 10வது தவணை குறித்த அறிவிப்பை இந்த விழாவில் பிரதமர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது, ​​தவணைக்கான நிலையானது 'RFT 10வது தவணைக்காக மாநிலத்தால் கையொப்பமிடப்பட்டது' என்று காட்டியுள்ளது. RFT (பரிமாற்றத்திற்கான கோரிக்கை) என்பது ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் வங்கியின் IFSC குறியீடு உள்ளிட்ட பயனாளியின் விவரங்களை மாநில அரசு சரிபார்க்கும் வழிமுறையாகும். மேலும், மாநிலங்கள் நடத்தும் விசாரணையில் தகவல்கள் சரியானவை என உறுதிப்படுத்தப்படுவது தான் RFT. எனவே மாநிலங்களால் 10வது தவணைக்கான விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது.

    அதன்படி இப்போது, ​​FTO (Fund Transfer Order) மட்டும் உருவாக்கப்பட வேண்டும். 'FTO உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் பணம் செலுத்துதல் உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது' என்று ஸ்டேட்டஸ் காட்டினால், பணம் கணக்கிற்கு விரைவில் மாற்றப்படும் என்று அர்த்தம்.

    PM கிசான் பயனாளியின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.

    1. pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்

    2. அதன் முகப்புப்பக்கத்தில், விவசாயிகள் கார்னர் என்ற தனிப் பகுதியை நீங்கள் பார்க்க முடியும்

    3. விவசாயிகள் கார்னர் பிரிவில், ‘பயனாளி நிலை’ என்ற டேப் உள்ளது. அதை கிளிக் செய்யவும்

    4. நீங்கள் நேரடியாக கூட https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற லிங்கிற்கு செல்லலாம்.

    5. உங்களுக்கு தேவையான திரை வந்தவுடன் அதில், ஆதார் எண், PM கிசான் கணக்கு எண் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.

    6. விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, தரவினை பெற விருப்பத்தை கிளிக் செய்யவும். அதன் பிறகு நீங்கள் உங்கள் நிலையைப் பார்க்க முடியும்.

    Must Read : Paytm யூசர்கள் கவனத்திற்கு.. கோவிட் தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் பற்றிய முக்கிய அப்டேட்

    பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 பெற தகுதியுடையவர்கள். இது ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். இருப்பினும், நிறுவன நில உரிமையாளர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்களாக கருதப்படுவர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Farmers, Money

    அடுத்த செய்தி