Home /News /business /

PM KISAN status :ரூ.2000 உங்கள் அக்கவுண்டுக்கு வந்து சேர்ந்ததா? இப்படி செக் செய்யுங்கள்!

PM KISAN status :ரூ.2000 உங்கள் அக்கவுண்டுக்கு வந்து சேர்ந்ததா? இப்படி செக் செய்யுங்கள்!

பிம் எம் கிசான்

பிம் எம் கிசான்

PM KISAN status check : நீங்கள் நேரடியாக கூட https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற லிங்கிற்கு செல்லலாம்.

    விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் பிம்.கிசான். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். பி.எம். கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் முதலில் கிசான் திட்டத்தில் இணைய வேண்டும். இதுவரை இந்த திட்டத்தில் 10 தவணைகள் விவசாயிகள் கணக்கில் வந்து சேர்ந்துள்ளன. 11வது தவணை நேற்று (மே 31) ஆம் தேதி வங்கிக் கணக்கில் வந்து சேரும், இதை பிரதமர் மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    நீண்ட நாள் எதிர்பார்ப்பு.. அஞ்சல் சேமிப்பில் இனி பணத்தை ஈஸியா அனுப்பலாம்!

    இப்போது கிசான் திட்டத்தில் சேர்ந்த விவசாயிகள் தங்களது வங்கி கணக்கில் ரூ. 2000 தொகை வந்து சேர்ந்ததா? என்பதை எவ்வாறு அறியலாம் என்பதை பார்க்கலாம். பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வரும்போது, ​​வங்கி மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படுகிறது, இதன் மூலம் உங்கள் கணக்கில் PM Kisan தவணை செலுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.இதை தவிர ஆன்லைனில் செக் செய்யும் வசதியும் உள்ளது.

    1. முதலில் நீங்கள் PM Kisan இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in க்கு செல்ல வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2. நீங்கள் இணையதளத்திற்குச் சென்றவுடன், முகப்புப் பக்கத்தில் விவசாயிகள் கார்னர் விருப்பம் என்ற ஆப்ஷன் இருக்கும்.

    3. அதன் கீழ் பயனாளி நிலை என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

    4. பயனாளியின் நிலை என்ற விருப்பத்தை கிளிக் செய்யும்போது, ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கும்.

    5. இங்கே நீங்கள் ஆதார் எண், கணக்கு எண், மொபைல் எண் ஆகிய விவரங்களை சரியாக உள்ளீட வேண்டும்.

    போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேர ரூ.1000 போதும்.. 5 வருடத்திற்குள் இவ்வளவு சேமிக்கலாம்!

    6. இப்போது டேட்டாவைப் பெறு என்பதை கிளிக் செய்யவும்.

    7. இப்போது உங்கள் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    8. நீங்கள் நேரடியாக கூட https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற லிங்கிற்கு செல்லலாம்.

    அதே போல் பிஎம் கிசான் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். ஆதார் அடிப்படையிலான ஒடிபி முறைக்கு உழவர் இ-கேஒய்சி விருப்பத்தைக் கிளிக் செய்ய இதனை அப்டேட் செய்யலாம்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, PM Kisan

    அடுத்த செய்தி