ஹோம் /நியூஸ் /வணிகம் /

PM KISAN : 12வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது.. ஏன் தெரியுமா?

PM KISAN : 12வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது.. ஏன் தெரியுமா?

பி.எம் கிசான்

பி.எம் கிசான்

PM KISAN Scheme : இன்னும் eKYC ப்ராசஸ் முடிக்காத விவசாயிகளுக்கு 12-வது தவணை தொகை கிடைக்காது

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அக்டோபர் மாதம் தொடங்கி 1 வாரம் முடிந்துள்ள நிலையில் நாட்டின் விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளின்படி, விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்த உதவும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 12-ஆம் தவணை நிதி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

  நலிவடைந்த விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நலிவுற்ற விவசாயிகளுக்கு நிதியாண்டு தோறும் 3 சம தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

  இன்றுடன் முடிவடைகிறது.. இனி ஐசிஐசிஐ வங்கியில் இந்த சேமிப்பு திட்டம் கிடையாது!

  இதனிடையே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 12-வது தவணைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 12-வது தவணை நிதி இந்த மாதம் விடுவிக்கப்படும் என தெரிகிறது. பிரதமர் கிசான் யோஜனாவின் 12-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், முன்னதாக இந்த தவணை நிதி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  வயசாயிடுச்சு முதலீடுகளில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!

  ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களால் அது முடியாமல் போக தற்போது 12-வது தவணை குறித்து பல அப்டேட்கள் வந்துள்ளன. தற்போது நிதி உதவி பெறுவோரை சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அது முடிந்தவுடன் அக்டோபர் 2 வது வாரத்திற்குள் 12-ஆம் தவணை நிதி விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  அதே போல e-KYC முடித்த விவசாயிகளின் அக்கவுன்ட்களில் மட்டுமே ரூ.2,000 நிதி டெபாசிட் செய்யப்படும். இன்னும் eKYC ப்ராசஸ் முடிக்காத விவசாயிகளுக்கு 12-வது தவணை தொகை கிடைக்காது என்று அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். e-KYC செய்து கொள்ளாத இந்த திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மேலும் e-KYCக்கான காலக்கெடு கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு முடிந்துவிட்ட நிலையில் இனி e-KYC செய்ய முடியாது.

  பிஎம் கிசான் 12-வது தவணை, பேலன்ஸை எப்படி பார்ப்பது.?

  - முதலில் மத்திய அரசின் அதிகாரபூர்வ வெப்சைட்டான https://pmkisan.gov.in/-க்கு செல்லவும்

  - ஹோம்பேஜில் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Farmer’s Corner செக்ஷனுக்கு செல்லவும்

  - Beneficiary Status என்ற ஆப்ஷனை செலக்ட் செய்வதன மூலம் ஒரு பயனாளி தனது அப்ளிகேஷன் ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்.

  - மேலும் அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் லிஸ்ட்டில் குறிப்பிட்ட விவசாயியின் பெயர் மற்றும் அவரது பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பப்பட்ட தொகை இருக்கும்.

  - இப்போது ஆதார் நம்பர் அல்லது அக்கவுண்ட் நம்பர் அல்லது மொபைல் நம்பரை என்டர் செய்யவும். இந்த மூன்றில் எதாவதொன்றை பயன்படுத்தி பயனாளிகள் தங்கள் கிரெடிட் விவரங்களை சரி பார்த்து கொள்ளலாம்.

  - பின் Get data என்பதை கிளிக் செய்யவும்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Govt Scheme, PM Kisan