ஹோம் /நியூஸ் /வணிகம் /

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் 12வது தவணை நிதி இம்மாதம் கிடைக்க வாய்ப்பு… ஆன்லைனில் விபரங்களை அறிவது எப்படி?

பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் 12வது தவணை நிதி இம்மாதம் கிடைக்க வாய்ப்பு… ஆன்லைனில் விபரங்களை அறிவது எப்படி?

பிஎம் கிசான்

பிஎம் கிசான்

அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து தகுதியுடையவராக இருந்தும் இந்த பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால், அரசிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பி.எம். கிசான் திட்டத்தின்கீழ் 12வது தவணை நிதி இம்மாதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பான விபரங்களை ஆன்லைனில் அறிவது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  பிரதமர் கிசான் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும். விவசாயிகள் குடும்பங்களுக்கு உதவுவதற்காக 2022-ஆம்  நிதியாண்டில் பி.எம். கிசான் திட்டத்திற்காக இதுவரை 1.80 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய குடிமக்களாக இருக்கும் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் பயன்பெற தகுதியானவர்கள். இது தவிர, தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள்.

  கூகுள் நிறுவனத்துக்கு அரசிடம் இருந்து நெருக்கடி - காரணம் இது தான்!

  பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 11வது தவணையை அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது, இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 12ஆவது தவணை நிதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. .

  PM கிசான் திட்டத்தில், ஒரு பயனாளியின் நிலையை ஆன்லைனில் பார்ப்பது குறித்த விபரம்-

  முதலில் : pmkisan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்

  2 ஆவதாக : முகப்புப் பக்கத்திலிருந்து, விவசாயிகள் கார்னர் என்ற தனிப் பகுதியை பார்க்கவும்

  3 ஆவதாக: விவசாயிகள் கார்னர் பிரிவில், ‘பயனாளி நிலை’ (‘Beneficiary Status’) என்ற பகுதி உள்ளது. அதை கிளிக் செய்யவும்

  அல்லது நீங்கள் நேரடியாக https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற இணைப்பிற்குச் செல்லலாம்.

  வாரக்கடைசி நாளான இன்று குறைந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

  4 ஆவதாக : தேவையான பக்கத்திற்கு சென்ற பிறகு, ஆதார் எண், PM கிசான் கணக்கு எண் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவிடவும்.

  6 ஆவதாக : விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, தரவு பெறு விருப்பத்தை Get Data option கிளிக் செய்யவும். அதன் பிறகு பயனாளியின் நிலையைப் பார்க்க முடியும்.

  இருப்பினும், அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து தகுதியுடையவராக இருந்தும் இந்த பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால், அரசிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

  Published by:Musthak
  First published:

  Tags: PM Kisan